திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கர்மவீரர்

முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர் உப்புக் காய்ச்ச வேதாரண்யம் நடந்தவர் நேருவுக்குப் பின் யாரெனக்கூற ஓடியவர் எப்போதும் நேர்மையின் பக்கம் நின்றவர்! கருப்பு நிறத்தவர் வெள்ளை உள்ளத்தவர் சிவப்புச் சிந்தனையாளர

Updated On :20 செப்டம்பர் 2012, 12:40 am

முதல்வர் இருக்கையில் அமர்ந்தவர்

உப்புக் காய்ச்ச வேதாரண்யம் நடந்தவர்

நேருவுக்குப் பின் யாரெனக்கூற ஓடியவர்

எப்போதும் நேர்மையின் பக்கம் நின்றவர்!

கருப்பு நிறத்தவர்

வெள்ளை உள்ளத்தவர்

சிவப்புச் சிந்தனையாளர்

பச்சைத் தமிழர்!

படிக்கட்டும் குழந்தைகள் -அதுதான்

படிக்கட்டு முன்னேற என்றார்.

படிக்காதவர்தான் இவர் -ஆனால்

பாருக்கே பாடநூல் ஆனார்!

துண்டு போட்டதுண்டு

தோளில் - நாட்டில் அன்று

தூக்கி எறிந்ததுண்டு

பதவியை - பண்பை யன்று

இறப்பதற்கென்றே சிலர் பிறப்பார்

மறப்பதற்கென்றே சிலர் பிறப்பார்

மறப்பதற்கும் நாம் மறந்துவிட்ட

மாமனிதர் இவர்தான் காமராசர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.