புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொன்மொழிகள்

1.  தீய வழியில் தேடிய செல்வம், செல்வாக்கு, மதிப்பு இவை மிதக்கும் மேகங்கள் போன்றவை.  -கன்ஃபூசியஸ் 2.  உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே!  -டா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:13 am

எம்.ராஜதிலகா

1.  தீய வழியில் தேடிய செல்வம், செல்வாக்கு, மதிப்பு இவை மிதக்கும் மேகங்கள் போன்றவை.

 -கன்ஃபூசியஸ்

2.  உனக்கு மற்றவர்கள் எதைச் செய்யக்கூடாதென்று எதிர்பார்க்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே!

 -டால்ஸ்டாய்

3.  நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மையைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது!

 -சாக்ரடீஸ்

4.  பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும்.

 -ரூஸோ

5.  உண்மை எதுவெனக் கண்டுபிடிப்பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மைதான் நிலைத்து நிற்கும்.

 -இங்கர்சால்

6.  உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது!

 -கார்ல் மார்க்ஸ்

7.  பிறர்நலம் போற்ற வேண்டும்; தன்னைப் போல பிறரையும் எண்ண வேண்டும்.

 -லெனின்

8.  பல நூல்களை ஒருவன் படிக்க வேண்டும்; நூல்களுடன் ஒருவன் வளராவிட்டால் அது அவனுக்குப் பேரிழப்பாகும்!

 -ஆபிரகாம் லிங்கன்

9.  உண்மை பேசுவது கசப்பாக இருப்பினும் அந்த உண்மையே எல்லாவற்றிலும் சிறந்தது!

 -நபிகள் நாயகம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.