தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

காந்தியடிகள்!

 தேசப்பிதா காந்திஜியை காந்தியடிகள் என்று குறிப்பிட்டு முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க.தான். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றிப் படித்தபோது காந்தியை காந்தியடிகள் என

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:31 pm

 தேசப்பிதா காந்திஜியை காந்தியடிகள் என்று குறிப்பிட்டு முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க.தான். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றிப் படித்தபோது காந்தியை காந்தியடிகள் என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.கலியாணசுந்தரனார் நவசக்தி பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்.

 காந்தியடிகள் மெட்ரிக் தேர்வு எழுதும்போது வினாத்தாளில் பொன்னைவிடப் பெரியது எது? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு காந்தியடிகள் எழுதிய விடை: உண்மை.

 காந்திஜி ஒருமுறை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரு ஓவியர் அவரைப் படம் வரைந்து கொண்டு வந்து காட்டினார்.

 ஓவியத்தைப் பார்த்த காந்தியடிகள், ""ஏன், என் காதைப் பெரிதாக வரைந்துவிட்டீர்கள்?'' என்று கேட்டார்.

 ""தங்களுடைய காது உண்மையிலேயே பெரியதாகத்தான் இருக்கின்றது'' என்று பணிவுடன் கூறினார் அந்த ஓவியர்.

 ""அப்படியா..! நான் கண்ணாடியே பார்ப்பதில்லை...'' என்று காந்தியடிகள் பதில் கூறினார்.

 பொதுவாக மகப்பேறில்லாத பெற்றோர் பிறர் குழந்தைகளை சுவீகாரம் எடுப்பார்கள். ஆனால் ஜம்னாலால் பஜாஜ் என்பவர் காந்திஜியைத் தனது தந்தையாக சுவீகாரம் எடுத்து, தனக்குச் சொந்தமான கிராமத்தை காந்திஜியின் பெயருக்கு எழுதி வைத்தார். அந்தக் கிராமமே பின்னாளில் சேவா

 கிராமம் என்று புகழ்பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.