திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆயிரம் கைகள் முளைக்கும்!

 அறிவு மட்டும் இருந்து விட்டால் ஆயிரம் கைகள்

News image
Updated On :8 டிசம்பர் 2012, 10:09 am

 அறிவு மட்டும் இருந்து விட்டால்
 ஆயிரம் கைகள்
 முளைக்குமடா - உன்
 அறிவில் ஆற்றல் கிடைத்து விட்டால்
 அனைத்தும் நன்றாய்
 நடக்குமடா!
 
 அறிவாய் எதையும் செய்து வந்தால்
 அமைதி உலகில்
 தோன்றுமடா - பிறர்
 அறிவை மதிக்கத் தவறி விட்டால்
 அழிவே நம்மை
 சூழுமடா!
 
 அறிவு பெற்று வாழ்வ தொன்றே
 அன்பு வாழ்க்கை
 ஆகுமடா - நல்
 அறிவை மறந்து விட்டால் இங்கே
 அனைத்து துன்பமும்
 சேருமடா!
 
 அறிவே உலகை ஆளும் திறனை
 அமைதி யாகப்
 பெற்றதடா - உலக
 அறிவைப் புரிந்து கொண்டால் போதும்
 அனைத்து உயிரும்
 வாழுமடா!

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.