ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பத்துக் கட்டளைகள்

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராக்ஃபெல்லர், இளைஞராக இருந்தபோது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தவில்லை. தனது 60-வது வயதில்தான் உடலைப் பேணும் விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முதுமையிலும் இளமை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:44 pm

நெ. இராமன்

உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ராக்ஃபெல்லர், இளைஞராக இருந்தபோது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தவில்லை. தனது 60-வது வயதில்தான் உடலைப் பேணும் விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முதுமையிலும் இளமையாக வாழ்ந்த ராக்ஃபெல்லர் பின்வரும் பத்துக் கட்டளைகளைப் பின்பற்றி வெற்றிகரமாக வாழ்ந்தார். நாமும் இக் கட்டளைகளை முயற்சித்துப் பார்க்கலாமே!

1. எந்தவிதக் கஷ்டம் வந்தாலும் வாழ்க்கையின் மீது வெறுப்படையக் கூடாது!

2. குறித்த காலத்தில், தகுந்த இடைவெளியுடன் உணவு உட்கொள்ள வேண்டும்!

3. உடற்பயிற்சி அவசியம்; அதற்காக அதிக நேரம் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது!

4. போதுமான நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

5. எந்தச் சமயத்திலும் மனம் கவலைப்படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது.

6. ஒவ்வொரு நாளும் ஆற்ற வேண்டிய பணிகளை திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

7. தினமும் சிறிது நேரமாவது சூரிய ஒளி, உடலில் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. உடலுக்குத் தேவையான அளவு பால் அருந்த வேண்டும்.

9. அடிக்கடி உடலைப் பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனைப்படி உடலைப் பராமரிக்க வேண்டும்.

10. சின்னஞ்சிறு காரியமானாலும் சிரத்தையுடன் செய்ய வேண்டும்; அதிகப்பிரசங்கித்தனம் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.