சின்ன வயசுலே நெப்போலியன் ராணுவ விடுதியிலே படிச்சிக்கிட்டிருந்தார். அந்தச் சமயத்துலே... அவருகூடத்தங்கியிருந்த இன்னொரு மாணவனுடைய அழகான பை ஒண்ணு காணாமப் போயிட்டுது. உடனே அந்த மாணவன் மேலதிகாரிகிட்டே போய் புகார் கொடுத்தான்.
"யார் மேலயாவது உனக்குச் சந்தேகம் உண்டா?' என்று மாணவனிடம் மேலதிகாரி கேட்டார்.
மாணவன், நெப்போலியன் பேர்லதான் சந்தேகம் என்றான்.
உடனே மேலதிகாரி நெப்போலியனை தன்னோட அறைக்குக் கூப்பிட்டார்.
நெப்போலியன் மெதுவாக அறைக்குள் நுழைந்தார்.
என்ன... ஏதுன்னு விசாரிக்கணுமில்லே... விசாரிக்கலே! உடனே பிரம்பைக் கையிலே எடுத்தார் மேலதிகாரி. கண்மண் தெரியாமல் நெப்போலியனை அடித்தார்.
"ஏன் திருடினே?' அப்படீன்னு கேட்டு நல்ல உதை. அவ்வளவு அடியும் உதையும் வாங்கிக்கிட்டு அமைதியா இருந்தார் நெப்போலியன்.
அதுக்குப் பிறகு கொடுத்த தண்டனையையும் வாங்கிட்டு பொறுமையா இருந்தார். எதுவும் பேசலே நெப்போலியன்!
கொஞ்சநாள் கழித்து புகார் கொடுத்த அந்த மாணவன் அந்த அதிகாரிகிட்டே ஓடிவந்தான்.
""ஐயா... என்னோட பையை அன்றைக்குத் திருடினது நெப்போலியன் இல்லை! வேற ஒரு மாணவன்.. இப்பத்தான் உண்மை தெரிஞ்சிது. தெரியாம நெப்போலியன் பெயரில் புகார் கொடுத்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்க!'' என்றான்.
அந்த அதிகாரிக்கு ரொம்ப ஆச்சரியம்.
உடனே நெப்போலியனைப் பார்த்து, ""உனக்கு என்ன பைத்தியமா? நீ என்ன முட்டாளா? அன்றைக்கு அந்த அடி உதைபட்டும் நீ உண்மையைச் சொல்லவில்லையே ஏன்?'' என்று கேட்டார்.
அதற்கு நெப்போலியன், அமைதியாக, ""நீங்க என்னை அடிக்கிறதுக்கு முந்திக் கேட்டிருந்தா சொல்லியிருப்பேன்! அடிச்சிக்கிட்டே கேட்டீங்க. அப்ப நான் இல்லை என்று சொன்னா... அடிக்குப் பயந்துக்கிட்டுத்தான் நான் அப்படிச் சொல்கிறதா நீங்க நினைப்பீங்க... நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது. அதைவிட அடி, உதை வாங்கிறதுலே எனக்கு ஆட்சேபனை இல்லை...'' என்றார்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த அதிகாரி அசந்துவிட்டார்.
"தான் பயந்ததாகக்கூட யாரும் நினைக்கக்கூடாது' என்னும் எண்ணம், எப்பேர்ப்பட்ட மனோதிடம்!
("சிந்தனை விருந்து' என்ற நூலிலிருந்து)
தொகுப்பு: கோட்டாறு ஆ. கோலப்பன்,
நாகர்கோவில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


