நீங்கள் மகிழ்ச்சியான மாணவரா?
தன்னம்பிக்கையே வெற்றியின் அடிக்கல். வெற்றியின் நான்கு தூண்கள்: சுறுசுறுப்பு, தொடர்ந்து செயலாற்றும் ஊக்கம்,


1.மகிழ்ச்சியானவராக இருக்க வேண்டுமென்றால் முதலில் உங்களை நீங்களே நேசிக்க வேண்டும்.
2.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நேர்மறைச் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான சம்பவங்களே நடக்கும்.
3.தன்னம்பிக்கையே வெற்றியின் அடிக்கல். வெற்றியின் நான்கு தூண்கள்: சுறுசுறுப்பு, தொடர்ந்து செயலாற்றும் ஊக்கம், பொறுமை, தன்னடக்கம்.
4.நல்ல நண்பன் உறவினர்களைவிட உயர்ந்தவன். நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
5.நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் இருங்கள். அவர்கள் தவறுகள் செய்திருப்பின் மறந்துவிடுங்கள்.
6.மற்றவர்களின் திறமையை பலர் முன்னிலையில் மனம்விட்டுப் பாராட்டுங்கள்.
7.உங்களைவிட உயரத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஏங்க வேண்டாம்; எதுவும் தகுதியானவர்களையே சேரும் என்பதை
உணருங்கள்.
8.மற்றவர்களோடு ஒப்பிட்டு உங்கள் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
9.தவறைச் செய்துவிட்டு குற்றவுணர்வோடு வாழ்வதைவிட, மன்னிப்பு கேட்பது உயர்வு என்பதை உணருங்கள்.
10.நான் என்ற சொல்லை நாம் என்று மாற்றுங்கள். ஆணவம் போய்விடும்.
11.நன்றி செலுத்துதல், வணக்கம் செய்தல், தேவைக்கேற்ப உதவுதல் போன்ற அனைத்தும் மரியாதையின் அடையாளங்கள். இவற்றை வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.
12.கோபத்தையும் ஆத்திரத்தையும் படபடப்பையும் அடியோடு நீக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்யுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...