சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பண்பு!

புதுதில்லியில் ஓர் இசைநிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. இசைத்துறையில் புகழ்பெற்ற ஓம்கார்நாத் தாகூர் என்பவரின் இசை நடந்தது. இந்த நிகழ்வில் அப்போதையப் பிரதமர் நேருவும், பிற அமைச்சர்களும் எனப் பிரபலங்கள் பலர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am

புதுதில்லியில் ஓர் இசைநிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. இசைத்துறையில் புகழ்பெற்ற ஓம்கார்நாத் தாகூர் என்பவரின் இசை நடந்தது. இந்த நிகழ்வில் அப்போதையப் பிரதமர் நேருவும், பிற அமைச்சர்களும் எனப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நேரு முன்வரிசையில் உட்கார்ந்து இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, பக்கத்திலிருந்தவரிடம் நேரு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த இசையறிஞர் தனது இசை நிகழ்வை நிறுத்திக் கொண்டார். நிறுத்தியவர் பார்வையாளர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார் -

""நம்முடைய நேரு அவர்கள் மிக இன்றியமையாத செய்தியினை பக்கத்தில் உள்ளவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய இசையால் அவருடைய பேச்சுக்குத் தடை ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, அவர் பேசி முடித்ததும் நான் தொடங்குவேன்..!''

இதைக் கேட்ட நேரு இசை நிகழ்வில் தன் செயல் தவறானது என்பதை உணர்ந்தார். இசையறிஞர் கிண்டல் செய்கிறார் என்பதையும் புரிந்து கொண்டார். இசையறிஞர் மீது வருத்தப்படவும் இல்லை.

தனது பேச்சை நிறுத்திக் கொண்டு இசை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.