நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஒவ்வோர் உயிரும் உயர்ந்ததுதான்!

 பேயைப் பற்றித் தெரியாமல் "பேயே' என்று திட்டுவதேன்?

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 7:33 am

பூதலூர் முத்து

 பேயைப் பற்றித் தெரியாமல்
 "பேயே' என்று திட்டுவதேன்?
 நாயின் நன்றி உணராமல்
 "நாயே' என்று சுட்டுவதேன்?
 
 கழுதை உழைப்பைப் பாராமல்
 கத்தல் மட்டும் கேட்பதேன்?
 எருமை பற்றி அறியாமல்
 "எருமை' என்று கத்துவதேன்?
 
 பன்றி செய்யும் தூய்மைபல
 "பன்றி' என்ற இழிப்புரைஏன்?
 ஆமை அரிய உயிரினமாம்
 "ஆமை' என்று பழிப்பதுஏன்?
 
 மரங்கள் செய்யும் பலநன்மை
 "மரமே' என்று திட்டுவதேன்?
 குரங்குகள் எல்லாம் காட்டுவளம்
 "குரங்கே' என்ற அலறல் ஏன்?
 
 ஒவ்வோர் உயிரும் உயர்ந்ததுதான் - இந்த
 உண்மை அறிந்து வாழ்ந்திடுவோம்!
 எவ்வித மேனும் இவற்றையெல்லாம்
 இன்முகத் தோடு காத்திடுவோம்!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.