பறவையைத் தொடர்வோம்...
நீளவால் கோழிக்கும் மற்ற கோழிகளுக்குமுள்ள முக்கிய வித்தியாசம் இதன் பெரிய கால்களும் கால் விரல்களும்தான்.


நீளவால் இலை கோழி
நீளவால் கோழிக்கும் மற்ற கோழிகளுக்குமுள்ள முக்கிய வித்தியாசம் இதன் பெரிய கால்களும் கால் விரல்களும்தான். இதனால் இந்தப் பறவையால் நீர்நிலைகளில் மிதக்கும் தாவர இலைகளின் மேல்கூட நடந்து செல்ல முடியும். இதற்கு நன்றாக நீச்சலடிக்கவும் தெரியும். நீண்ட வாலைக் கொண்டிருப்பதால் இந்தப் பெயர். ஆணைவிட பெண் பறவைகள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாகவும் அழகாகவும் இருக்கும்.
இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேஷியாவில் அதிகம் இப் பறவையைப் பார்க்கலாம். தைவானிலும் ஆஸ்திரேலியாவிலும் சில காலங்களில் மட்டும் இவற்றைப் பார்க்கலாம்.
39 முதல் 58 செ.மீ. நீளம் வரை இருக்கும். வால் மட்டும் 25 செ.மீ. நீளம் இருக்கும். எடை 250 கிராம் வரை இருக்கும்.
முழுவதும் கருப்பாக, வெள்ளைச் சிறகுகளுடன் இருக்கும். கழுத்தின் பின்பகுதி தங்க நிறத்தில் ஜொலிக்கும். கண்ணைச் சுற்றி பளீரென்று வெண்மை நிறம் காணப்படும். கால்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறம்.
நீர்நீலைகளில் மிதக்கும் தாவர இலைகளை விரும்பிச் சாப்பிடும்.
ஒரு சமயத்தில் 10 முட்டைகள் வரை இடும். முட்டைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
நீர்க் கோழி
நீர்க்கோழியை இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, தென்சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் பார்க்கலாம்.
உடல் பகுதி சற்றே நசுங்கிப்போனது போல காணப்படும்.
உடல் முழுவதும் சாம்பலும் கருப்பும் கலந்த கலவை நிறம் காணப்படும். சிறகுகள் சற்றே சிறிதாக குத்திட்டு நிற்கும். மஞ்சள் நிற நீண்ட கூரிய அலகு. சிவப்பு நிறக் கொண்டை பார்ப்பதற்கு அழகு. மஞ்சள் நிறக் கால்கள் நீண்டு பெரியதாக இருக்கும். நீண்ட விரல்களைக்கொண்டிருக்கும். மிகவும் குட்டையான வால் இதற்கு.
இதுவும் நீர்ப்பறவைதான். சதுப்பு நிலங்களில் வசிக்கும். கூடுகளை வறண்ட நிலப் பகுதியில் அமைத்துக் கொள்ளும். ஒரு சமயத்தில் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.
இதன் நீண்ட கால்கள் எந்தவிதமான அடர்த்தியான செடிப் புதர்களுக்குள்ளும் நடக்கும் வல்லமையை இவற்றுக்குத் தந்துள்ளன.
43 செ.மீ. நீளப் பறவை. எடை 650 கிராம் வரை. பெண் பறவைகள் ஆணை
விடச் சிறிதாக இருக்கம்.
நீண்ட உறுதியான அலகு இருப்பதால் எந்தவிதமான சேறு சகதியும் நிறைந்த இடத்தில் கூட தனது அலகை நுழைத்து இரையைத் தேடிப் பிடிக்கும். சிறு பூச்சிகள், சிறிய மீன்கள் மற்றும் செடிகளின் விதைகளை விரும்பிச் சாப்பிடும்.
இந்தப் பறவையை அதிகமாக வெளியிடங்களில் பார்க்க முடியாது. எப்போதும் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கும் இயல்பைக் கொண்டவை. ஆனால் இவற்றின் குரல் மட்டும் பெரிதாக ஒலிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...