நற்செயல்கள் பொன்மொழிகள்
எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ அது நற்செயல் ஆகாது


1. வாயால் போதிப்பதை விட உன் நடத்தையே சிறந்த
போதனையாக அமையும். - கோல்ட்ஸ்மித்
2. நற்செயல் என்ற விளைநிலத்தைச் சீர்படுத்து. அதில் இறைவன் திருநாமம் என்ற விதையைத் தூவு. - குருநானக்
3. எந்தச் செயலைச் செய்தால் பின்னர் மனம் வருந்துமோ, எதன் பயனை அழுதுகொண்டே அனுபவிக்க வேண்டியிருக்குமோ அது நற்செயல் ஆகாது. - புத்தர்
4. நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் பலன் அளித்தே தீரும்
என்பது என் உறுதியான நம்பிக்கை. - காந்தியடிகள்
5. மிகச் சிறியவை என்று மக்கள் கருதும் செயல்களே மகான்களைத் தோற்றுவிக்க அடிப்படையாக உள்ளன. - தாமஸ் மன்றோ
6. நல்ல செயல்களில் மனதைச் செலுத்தி, அதன் மூலம் தீய
நெறிகளின் நினைவே எழாதிருக்கச் செய்வதே நலம்.
- பித்தகோரஸ்
7. நல்லவராய் நாம் இருப்பதற்கு நல்லது செய்ய வேண்டும்.
- எட்வரட்டஸ்
8. ஒவ்வொரு நற்செயலும் அழிவற்ற நித்திய வாழ்வுக்கு வித்தாகும்.
- புனித பெர்னார்ட்
9. நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடித்துவிட வேண்டும்.
- வள்ளலார்
-தொகுப்பு:
த.சீ.பாலு, சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...