பறவையைத் தொடர்வோம்...
செந்நாரை கொக்கு இனத்தைச் சேர்ந்த பறவை. கொக்கைப் போலவே நீண்டு வளைந்த கழுத்தையும் நீண்ட குச்சிக் கால்களையும் மெல்லிய உடல் பகுதியையும் கொண்ட பறவை.


செந்நாரை
செந்நாரை கொக்கு இனத்தைச் சேர்ந்த பறவை. கொக்கைப் போலவே நீண்டு வளைந்த கழுத்தையும் நீண்ட குச்சிக் கால்களையும் மெல்லிய உடல் பகுதியையும் கொண்ட பறவை.
செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். அலகு மெல்லியதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். நிற்கும்போது 94 செ.மீ. வரை உயரம் இருக்கும்.
குழுக்களாக வாழும், இரை தேடும். பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே காணப்படும். மீன்கள், தவளைகள் மற்றும் சிறிய பூச்சிகள் பிடித்த உணவு வகைகள். உணவுக்காக பொறுமையாக வெகுநேரம் வரை காத்திருக்கும்.
வானில் மிக மெதுவாகப் பறக்கும். கழுத்து எப்போதும் சற்றே வளைந்து பாம்பு போல காணப்படும்.
குளிர்காலங்களில் அதிகமாகக் காணப்படும். ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தப் பறவையைப் பார்க்கலாம்.
தோசி கொக்கு
தோசியும் கொக்கு இனப் பறவைதான். இதற்கு நீண்ட கழுத்து கிடையாது. நீண்ட கூர்மையான அலகைக் கொண்ட பறவை. முழுவதும் நீலமும் சாம்பலும் கலந்த வண்ணத்தில் இருக்கும். உடலில் வரி வரியாகக் காணப்படும். தலை மட்டும் கருப்பாக இருக்கும். மஞ்சள் நிறக் கால்களை உடையது. சற்றே குள்ளமான பறவை. ஆனால் அடர்ந்த வண்ணச் சிறகுகளுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
"கொக்குப் பொறுமை' என்பார்களே அது இதற்கும் பொருந்தும். தனது இரைக்காக வெகு நேரம் காத்திருக்கும். மீன்களும் சிறிய புழு பூச்சிகளும் பிடித்த உணவு.
வெளிர்நீல வண்ணத்தில் 2 முதல் 5 முட்டைகளை ஒரு சமயத்தில் இடும்.
இப் பறவையின் கூடுகள் யாரும் காணமுடியாத இடத்தில் இருக்கும்.
பெரிய கொக்கு
கொக்கு இனத்திலேயே அளவில் மிகவும் பெரிதாக இருப்பதால் பெரிய கொக்கு என்ற பெயர். முழுவதும் வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருக்கும். 1 மீட்டர் வரை உயரம் இருக்கும். சிறகுகளை விரித்தால் 170 செ.மீ. அகலம் இருக்கும். எடை 1500 கிராம் இருக்கும். அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். நீண்ட கருப்பு நிறக் கால்களைக் கொண்ட பறவை.
இதுவும் மிக மெதுவாகப் பறக்கும் பறவைதான். பறக்கும்போது தனது நீண்ட கழுத்தைச் சுருக்கிக்கொள்வதைப் பார்க்க விநோதமாக இருக்கும்.
எப்பொழுதும் குழுக்களாகவே வசிக்கும். அடிக்கடி புலம் பெயரும் பறவை. மீன்களைத் தனது அலகால் குத்திச் சாப்பிடும்.
உலகெங்கும் பரவலாகக் காணப்படும் பறவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...