சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கடலைப் பாரு...

துள்ளித் துள்ளி குழந்தை போலகுதிக்கும் கடலைப் பாரு.

News image
Updated On :22 நவம்பர் 2013, 2:29 am

 துள்ளித் துள்ளி குழந்தை போல
 குதிக்கும் கடலைப் பாரு.
 அள்ளி அள்ளி வெள்ளி நுரையைத்
 தள்ளும் கடலைப் பாரு.
 
 கரையை வணங்கி முத்த மிட்டு
 திரும்பும் அலைகள் பாரு.
 குறைந்தி டாமல் எந்த நாளும்
 நிறைந்த நீரைப் பாரு.
 
 பிடிக்கப் பிடிக்க மேலும் மேலும்
 பெருகும் மீன்கள் பாரு.
 துடிக்கத் துடிக்க வலையை வீசி
 பிடிக்கி றார்கள் பாரு.
 
 வானின் நீலம் வாங்கிப் பூசும்
 மேனி அழகைப் பாரு.
 மீன்கள் நீரில் நீந்தும்போது
 மின்னும் அழகைப் பாரு.
 
 ஆறு பெருகி கடலைத் தேடி
 சேரும் அழகைப் பாரு.
 ஏறும் படகு ஊஞ்சல் போல
 ஆடும் அழகைப் பாரு.
 
 அள்ள அள்ளக் குறைந்தி டாமல்
 உள்ள மணலைப் பாரு.
 பிள்ளை கைகள் வீடு கட்ட
 பெரிதும் உதவும் பாரு.
 
 கதிர வனின் உதயம், மறைவு
 கடலில் தெரியும் ஜோரு
 கடலைப் போல மனமி ருந்தால்
 கடவுள் தெரிவார் பாரு.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.