17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உழவு பழமொழிகள்

உழவுக்காலத்தில் ஊரைவிட்டே போய்விட்டால், அறுவடைக் காலத்தில் ஆள் தேட வேண்டாம். 

News image
Updated On :17 ஜனவரி 2014, 8:03 am IST

 1. உழவுக்காலத்தில் ஊரைவிட்டே போய்விட்டால், அறுவடைக் காலத்தில் ஆள் தேட வேண்டாம்.
 
 2. உடையவன் பாராப் பயிர்
 உருப்படுமா?
 
 3. உழுவோர் உழைப்பால்தான்
 உலகோர் பிழைப்பார்.

 4. உழவு அற உழுதவன் ஊரில் பெரியவன்!
 
 5. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
 
 6. பாவி பாவம் பதராய் விளையும்.
 
 7. அவரைக்கு ஒரு செடி ஆதீனத்துக்கு
 ஒரு பிள்ளை.
 
 8. ஆடி மாதம் அவரை போட்டால், கார்த்திகை மாதம் காய் காக்கும்.
 
 9. ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டில்லை; பூசாரி
 பாட்டுக்குப் பின்பாட்டு இல்லை.
 -தொகுப்பு: பாங்கை. வ. காமராஜ்,
 திண்டிவனம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.