தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நல்ல அப்பா!

முதல் வகுப்பு டீச்சர் தலைமையாசிரியர் அழைத்ததற்காக வகுப்பறையைவிட்டு வெளியே சென்றிருந்த பதினைந்து நிமிடங்களுக்குள் வகுப்பறை திமிலோகப்பட்டுவிட்டது. ஒரே கூச்சல். சப்தம். அதோடு இரண்டு பெண் குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, ""போடி'', ""வாடி'' என்று வேறு திட்டிக் கொண்டனர்!

News image
Updated On :22 ஆகஸ்ட் 2015, 11:55 am

நா. கிருஷ்ணமூர்த்தி

முதல் வகுப்பு டீச்சர் தலைமையாசிரியர் அழைத்ததற்காக வகுப்பறையைவிட்டு வெளியே சென்றிருந்த பதினைந்து நிமிடங்களுக்குள் வகுப்பறை திமிலோகப்பட்டுவிட்டது. ஒரே கூச்சல். சப்தம். அதோடு இரண்டு பெண் குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, ""போடி'', ""வாடி'' என்று வேறு திட்டிக் கொண்டனர்!

டீச்சர் கோபத்துடன் வகுப்பறையில் நுழைந்ததும் வகுப்பு அமைதியடையத் தொடங்கியது!

""எதற்காக இப்படிக் கூச்சலிட்டீர்கள்?'' என்று டீச்சர் மேஜையை கரும்பலகையை அழிக்கும் கட்டையால் ஒரு தட்டுத் தட்டினார்.

""டீச்சர், இவதான் முதல்ல கத்தினாள்'' என்று ஒரு பெண் எழுந்து நின்று சொன்னதும் ஒவ்வொருவராக, ""நானில்லை டீச்சர், இவதான்'' என்று மாறி மாறிச் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

மீண்டும் மேஜையைத் தட்டிய டீச்சர் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்ததைப் பார்த்து அவளை அழைத்தார்.

""நீ எதற்கு இப்ப அழறே?''

""அவ என்னை அடிச்சா, டீச்சர்''

""எதுக்கு நீ அவளை அடிச்சே''

""அவ என்னை போடீன்னு சொன்னா டீச்சர்''

டீச்சர் இருவரையும் தன்னருகில் அழைத்து, ""இதோ பாருங்கள், இனிமேல் ஒருவரை ஒருவர் "போடி', "வாடி' என்று திட்டிக் கொள்ளக் கூடாது. அது கெட்ட வார்த்தை தெரிஞ்சுதா?... அதுபோல் அடித்துக் கொள்ளவும் கூடாது'' என்று கூறிவிட்டு, ""எங்கே இரண்டு பேரும் "சாரி' சொல்லுங்க பார்க்கலாம்'' என்றார்.

இருவரும் "சாரி' சொன்னார்கள்.

அவ்வளவுதான்! அவர்கள் சமாதானமாகிவிட்டார்கள்.

""குட்... நீங்க ரொம்ப ரொம்ப நல்ல குழந்தைகள்... எதுவாயிருந்தாலும் நீங்க டீச்சர்கிட்டதான் சொல்லணும்.... ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது, தெரிஞ்சுதா?''

குழந்தைகள் சிரித்தவாறே தலையை ஆட்டிவிட்டு இருக்கைக்குச் சென்றனர்.

அவன் அலுவலகத்திலிருந்து எரிச்சலுடன் வந்தான். மனைவி எதையோ சொல்ல அவன் கோபத்தில் கத்த ஆரம்பித்து கடைசியில், ""போடி, பெரிசா பேச வந்துட்டே'' என்று உரக்கக் கத்தினான்.

வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த குழந்தை ஓடிவந்து, ""அப்பா!... அம்மாவை போடீன்னு சொல்லக் கூடாது. அது கெட்ட வார்த்தையாம். இன்னிக்கு டீச்சர் சொன்னாங்க... எதுவாக இருந்தாலும் எங்க டீச்சர்கிட்டதான் சொல்லணுமாம்... எங்க அம்மாகிட்ட "சாரி'ன்னு சொல்லுங்க, அப்பதான் நீங்க நல்ல அப்பா. தெரிஞ்சுதா?'' என்றதும் அவனுடைய கோபம் மாயமாய் மறைந்து மனைவியைப் பார்த்தான். இருவருக்கும் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது!

அப்பாவும், அம்மாவும் சிரிப்பதைப் பார்த்து குழந்தையும் கள்ளமில்லாமல் சிரித்தது.

""இனிமே அம்மாவை போடீன்னு சொல்ல மாட்டேன்... சரிதானே?'' என்று குனிந்து குழந்தையின் முகத்தருகில் சொன்னதும், ""அப்பா, ரொம்ப நல்ல அப்பா'' என்று அன்புடன் குழந்தை அப்பாவைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.