மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நேர்வழி

ராஜாராமன் - ராதிகா தம்பதியருக்கு இன்று பனிரெண்டாவது திருமண நாள். பத்து வயது மகன் பாரதிகுமாருடன் மாலை வேளையில் கோயிலுக்குப் போனார்கள்.

News image
Updated On :11 ஜூலை 2015, 4:04 pm

செல்வகதிரவன்

ராஜாராமன் - ராதிகா தம்பதியருக்கு இன்று பனிரெண்டாவது திருமண நாள். பத்து வயது மகன் பாரதிகுமாருடன் மாலை வேளையில் கோயிலுக்குப் போனார்கள். பொதுவாக திருமண நாள், பாரதிக்குமாரின் பிறந்த நாள் ஆகிய தினங்களில் மட்டும் அவர்கள் ஆலயம் செல்வது வழக்கம். இரண்டு பேருமே வேலைக்குப் போவதால் மற்ற நாள்களில் வீட்டுப் பூஜை அறையில் சாமி கும்பிடுவதோடு சரி. ஆலயம் போக அவர்களுக்கு நேரம் அனுமதிப்பதில்லை.

கணவன் - மனைவி இருவர் பெயர்களிலும் அர்ச்சனை செய்துவிட்டு... அர்ச்சகர் காட்டிய தீபத்தட்டில், ஆளுக்கு இருபது ரூபாய் போட்டு அர்ச்சகரை முகம் மலர வைத்துவிட்டு... ஆலயப் பிரகாரம் சுற்றி... ஆங்காங்கே வீற்றிருக்கும் தெய்வங்களை வணங்கி விட்டு... கொடி மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள். கோயில் மரபுப்படி கொடிமரத்தடியில் சிறிது நேரம் உட்கார வேண்டும். அதனால் மூவரும் அமர்ந்தார்கள்.

அர்ச்சகர் பொங்கல் விநியோகம் செய்ய வந்தவுடன், சிறுவர் கும்பல் எங்கிருந்தோ ஓடி வந்து அர்ச்சகரைச் சுற்றி வளைத்தது. ""வரிசையில் வாங்க. முட்டி மோதாதிங்க..'' அர்ச்சகர் ஓங்கிய குரலில் சொன்னதை, சிலர் மட்டும் கேட்டு வரிசைக்குப் போனார்கள். பலர் கும்பலோடு கும்பலாய் முன்னேறினார்கள்... முற்றுகை இட்டார்கள்.

அப்பா - அம்மாவுடன் அமர்ந்திருந்த பாரதிக்

குமாரும் பொங்கல் வாங்க ஓடினான். சிறுவர் கூட்டம் கூடிக்கொண்டே போனதே தவிர குறையக் காணோம். அர்ச்சகர் சிரமப்பட்டு.. சமாளித்து... பொங்கல் விநியோகத்தை முடித்தார். பாரதிக்

குமாருக்கு பொங்கல் கிடைக்கவில்லை. வெறும் கையோடு வந்தான்.

""என்னடா குமார் பிழைக்கத் தெரியாத பையனா இருக்க... எல்லாரும் கும்பல்ல புகுந்து முட்டி மோதி முயற்சி செய்யும்போது... நீ வரிசையில் போய் நின்னா பொங்கல் ஒனக்கு எப்பிடிக் கெடைக்கும்...? ஒனக்கு பின்னாடி போன பயல்கள் எல்லாம் பொங்கல் வாங்கிட்டு ஓடிட்டான்க... நீ வெறும் கையோட வந்து நிக்கிற... இப்படி இருந்தா... எதிர்காலத்தில் எப்படி முன்னேறுவ...''

பாரதிக்குமாரின் இயலாமையை சற்று கோபமாய்ச் சுட்டிக்காட்டினான் இராஜாராமன். பாரதிக்குமாரின் பால் வடியும் முகம் சுருங்கிப் போய்விட்டது. பொங்கல் கிடைக்காத வருத்தத்தைக் காட்டிலும் அப்பா சொன்ன விசயங்கள் அவனுக்கு அதிக சங்கடத்தை அளித்தது.

""என்னங்க... பேசுறீங்க... பிள்ள முறையா வரிசையில நின்னு பொங்கல் வாங்கப் போயிருக்கான். அதப் பாராட்டாம என்னென்னமோ பேசுறீங்க... குறுக்கு வழியில போயி... பொங்கல் வாங்கிறதவிட ஒழுங்கா நேர் வழியில நின்னு வாங்காம வந்தது ஒண்ணும் கேவலமில்லீங்க... குறுக்கு வழியில போனாத்தான் பலன் கெடைக்கும்ங்கிற எண்ணங்கள... இந்தப் பிஞ்சு மனசில இப்பவே பதிய வைக்கக் கூடாதுங்க... இந்தக் குறுக்கு வழிக் குணம் வளர்ந்து... வளர்ந்து... வருங்காலத்தில் பலனைத்தான் பாக்கத் தோணுமே தவிர... அது வரும் வழிமுறையைப் பத்தி யோசிக்கத் தோணாது... எதிர்காலத்தில நம்ம பிள்ள வல்லவனா இருக்கான்னு கேக்கிறதக் காட்டிலும்... நேர்வழியில போயி நல்லவனா இருக்கான்னு கேக்றதுதான் நமக்குப் பெரும...''

மனைவியின் அழுத்தமான பேச்சு இராஜாராமனைச் சிந்திக்க வைத்தது.

""சாரிடா குமார்... பொங்கல் கிடைக்காட்டாலும் பரவாயில்ல... நீ போய் வரிசையில நின்னு வாங்கணும்னுங்கிற ஒழுங்க கடைபிடிச்சது ரெம்ப ரெம்பச் சரியானது. ராதிகா.... குமாருக்கு இன்னக்கி வீட்டுல பொங்கல் செஞ்சு கொடு...''

அப்பாவின் பாராட்டு மொழிகள் கேட்டு பாரதிக்குமாரின் பிஞ்சு முகம் பிரகாசமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.