பொன்மொழிகள்
உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே செயல்களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமையாதவை.


அரவிந்தன் நீலகண்டன் / சாந்தினிதேவி ராமசாமி
உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ அப்படியே செயல்களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமையாதவை. -சிம்மன்ஸ்
வாழ்க்கையில் எவ்வித லட்சியமும் இல்லாதவனே எல்லோரையும் காட்டிலும் ஏழையாக எண்ணப்படுவான். - ஆல்பர்ட் ஸ்வைட்சர்
ஒரு புத்திசாலி தனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களைவிட இன்னும் அதிக அளவில் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வார். -பேக்கன்
பசி, உழைப்பு, வியர்வை ஆகியவைகளே மிகச் சிறந்த மருந்துகள். -சார்லஸ் கிங்ஸ்வி
தற்பெருமை தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது. -பிளச்சர்
வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல்மிக்கவர்களாக இருந்து வருகிறோம் -ஆஸ்கர் ஒயில்டு
நன்றாகப் பேசுவது நல்லதுதான். ஆனால் நன்றாகச் செய்வது அதனினும் நல்லது. -க்ளார்க்
நம் வாழ்க்கைப் படகின் கீழே பக்தி என்னும் நீர் நிறைந்து இருக்குமாயின் வாழ்க்கைப் படகு மிகவும் மகிழ்ச்சியுடன் செல்லும். -வினோபா
சத்தியம் எப்போதும் தனியாகச் சென்று வரும். பொய்யுக்குத்தான் துணை வேண்டும். -பயர்ஸ்
வெற்றியிலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை. ஆனால் தோல்விகளிலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்கிறோம். -பௌல்டிங்
உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும் சரி, ஒரு நாட்டையும் சரி, மிகவும் பாதித்து விடுகிறது. -வின்சென்ட் பீல்
மனிதன் சூரியனாய்ப் பிரகாசிக்க வாய்ப்பிருக்கும்போது ஏன்? மெழுகுவர்த்தியாய் வெளிச்சம் தர வேண்டும். -நெப்போலியன் கில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...