மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காரணம்!

குரு நானக் தம் சீடர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இது அவரது மகன்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களைவிட சீடர்களே தந்தையிடம் அதிக அன்பைப் பெறுகின்றனர் என்று எண்ணினர். ஒரு நாள் அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டனர்.

News image
Updated On :6 ஜூன் 2015, 2:08 pm

குரு நானக் தம் சீடர்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இது அவரது மகன்களுக்குப் பிடிக்கவில்லை. தங்களைவிட சீடர்களே தந்தையிடம் அதிக அன்பைப் பெறுகின்றனர் என்று எண்ணினர். ஒரு நாள் அதற்கான காரணத்தை தந்தையிடமே கேட்டனர்.

எப்படி அதைப் புரிய வைப்பது என்று குரு நானக் யோசித்தார். பக்கத்தில் இருந்த ஒரு கிண்ணத்தை எடுத்து அருகே இருந்த சாக்கடையில் வீசி எறிந்தார். அந்தக் கிண்ணத்தை எடுத்து வருமாறு தன் மகன்களைக் கேட்டுக்கொண்டார்.

உடனே அவர்கள் ஒரு வேலையாளை அழைத்து சாக்கடைக்குள் வீசப்பட்ட கிண்ணத்தை எடுத்து வருமாறு உத்தரவிட்டனர். அதே நேரம் குரு நானக் வேலைக்காரரைத் தடுத்துவிட்டு, தம் சீடர்களுள் ஒருவரை அழைத்தார்.

சீடரை நோக்கி சாக்கடைக்குள் வீசியெறிந்த கிண்ணத்தை எடுத்து வருமாறு பணித்தார்.

சிறிதும் தாமதிக்காத அந்தச் சீடர் சாக்கடைக்குள் இறங்கி கிண்ணத்தை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து குருநானக்கிடம் கொடுத்தார்.

மகன்களைப் பார்த்த குருநானக், ""நான் ஏன் சீடர்களிடம் அதிக அன்பு கொண்டிருக்கிறேன் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே!''என்றார். தங்களது அறியாமையை எண்ணி குருநானக்கின் மகன்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.