கருவூலம்: மலைக்க வைக்கும் மலைச்சிற்பம்!
ஒரு பெரிய மலையில் நான்கு முகங்கள் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் திரைப்படங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ பார்த்திருக்கக் கூடும்!


மெளண்ட் ரஷ்மோர்!
ஒரு பெரிய மலையில் நான்கு முகங்கள் மிகப்பெரிய அளவில் செதுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் திரைப்படங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ பார்த்திருக்கக் கூடும்! அது அமெரிக்காவில் தெற்கு "டகோடா' மாகாணத்தில் உள்ள "ரஷ்மோர்' நினைவுச் சின்னம் ஆகும்.
அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 130 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் வகையில் இந்நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்பட்டது. "சார்லஸ்' இ.ரஷ்மோர்' என்பவர் 1885 ஆம் ஆண்டு முதன்முதலாக அடர்ந்த கானகங்களின் வழியாகப் பயணம் செய்கையில் இம்மலைப் பகுதியைக் கண்டறிந்தார். எனவே அவர் பெயராலேயே இம்மலைப்பகுதி அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை ஆண்ட அதிபர்கள் நால்வரின் முகங்களும் இம்மலைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன.
அவர்கள்,
ஜார்ஜ் வாஷிங்டன்
தாமஸ் ஜெஃபர்ஸன்
தியோடர் ரூஸ்வெல்ட்
ஆபிரஹாம் லிங்கன் ஆவர்.
இந்நால்வரும் அமெரிக்க அதிபர்களிலேயே மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்நினைவுச் சின்னமான்து 1200 ஏக்கர் பரப்பளவும், கடல் மட்டத்தில் இருந்து 5725 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், வருவாய் ஈட்டவும் இந்நினைவுச் சின்னம் ஏற்படுத்தப்பட்டது! டேனிஷ் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிற்பி "கட்ஸன் போர்க்ளம்' (எமபழஞச ஆஞதஎகமங) மற்றும் அவரது மகன் "லிங்கன் போர்க்ளம்' (கஐசஇஞகங ஆஞதஎகமங) ஆகியோரால் இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டன. 1927ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பணிகள் 1942ஆம் ஆண்டு முழுமையடைந்தன. இம்மலையின் பாறைகளைச் செதுக்க "டைனமைட்' பெருமளவு பயன்படுத்தப்பட்டது!
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் முகமே முதலில் செதுக்கப்பட்டதாகும். இது 1934ஆம் ஆண்டு அமெரிக்க சுதந்திர தினமாகிய ஜூலை 4ஆம் தேதி அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது! அதைத் தொடர்ந்து அச்சிலையின் வலது புறத்தில் தாமஸ் ஜெஃபர்ஸனின் முகம் செதுக்கப்பட்டு 1936ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டது! ஆப்ரஹாம் லிங்கனின் முகம் 1937ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அன்றும் 1939ஆம் ஆண்டு தியோடர் ரூஸ்வெல்டின் முகம் முழுமையாகச் செதுக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இம்மாபெரும் பணியில் ஏறத்தாழ 400 உதவியாளர்கள் பங்கு பெற்றனர். இப்பணி மிக ஆபத்து மிகுந்ததாயினும் மிகப்பாதுகாப்பாக எவ்வித உயிர்ச்சேதமுமின்றி நடைபெற்றது!
இந்நினைவிடத்தின் அருகிலேயே ஸ்டுடியோ (பஏஉ நஇமகடபமதஉந நபமஈஐஞ) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இம் மலைப்பகுதியின் பின்புறம் 70அடி உயரத்தில் வெட்டி எடுக்கப்பட்ட அறை போன்ற பகுதி ஒன்று உள்ளது. இதில் பீங்கான் பலகைகளில் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் நகல், அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம், நான்கு அமெரிக்க அதிபர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்நினைவிடத்தை வடிவமைத்த சிற்பி போர்க்ளம்மின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைப் பதிவு செய்து மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆண்டு தோறும் ஏறத்தாழ இரண்டு லட்சம் பேர் இந்நினைவிடத்தைப் பார்வையிடுகின்றனர். இந்நினைவிடத்தை சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டுவரை கைகளால் இச்சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு வந்தன. இப்பணிக்காக நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பல பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 1998ஆம் ஆண்டு முதல் நவீன லேசர்கள் கொண்டு இச்சிலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால் பாறைகளுக்கிடையே ஏற்படும் விரிசல்கள், பிளவுகள் போன்றவை எளிதாகக் கண்டறியப்பட்டு அவை தகுந்த வேதிப் பொருட்களைக் கொண்டு சரி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பின் கீழ் இச்சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...