ஓரு காட்டில் சிங்கம் ஒன்ரு மான்கூட்டத்தை விரட்டிக் கொண்டு ஓடிவர எல்லா மான்களும் வேகமாக ஓடின. அந்தக் கூட்டத்தில் இருந்த குட்டிமான் ஒன்றும் வேகமாக ஓடும் தாயுடன் மிகுந்த சிரமத்துடன் ஓடியது. சிங்கம் ஒரு பெரிய மானை அடித்து வீழ்த்திவிட மற்ற மான்கள் தப்பித்து ஓடி பாதுகாப்பான இடத்தை அடைந்தது.
குட்டி மானுக்கு மிகவும் களைப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது. அது தன் தாயிடம் ""இது என்ன வாழ்க்கை?..., தினம் தினம் பயந்து ஓடிக்கொண்டு எனக்கு மிகவும் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் அவமானமானதாகவும் இருக்கிறது. நான் மட்டும் சிங்கமாக இருந்தால் இப்படி பயந்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்காதே'' என்று புலம்பியது. தாய் மான் ஆறுதல் கூறியும் குட்டி அமைதியடையவில்லை.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த வயதான மான் ஒன்று குட்டியிடம், ""உன் நிலை எவ்வளவோ பரவாயில்லை. உனக்கு ஓட முடிகிறது! சிங்கம் துரத்திக் கொண்டு வந்தால்தான் பிடிக்கமுடியும். பல சமயங்களில் நம்மை பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறது. ஆனால் நீ ருசித்து உண்ணும் செடிகளின் நிலையை நினைத்துப் பார்! அதனால் ஓடக்கூட முடியாது. நாம் கூட்டமாக சென்று கடித்துக் குதறும் பொழுது அப்படியே நிற்கத்தான் வேண்டும். அதுவும் ஓர் உயிர்தான். அதன் நிலைக்கு நம் நிலை மேலானதே. சிங்கத்தையும் வேட்டையாடி மனிதர்கள் கொன்று விடுவது உண்டு. அவற்றுக்குள் சண்டை வந்து இறந்து விடுவதும் உண்டு. வயதான மற்றும் காயம்பட்ட சிங்கங்களால் ஓடக்கூட முடியாது!.......,
.....இன்பமும் துன்பமும் எப்பொழுதும் கலந்துதான் இருக்கும்! மானாகப் பிறந்தால் மானாகவும் சிங்கமாகப்பிறந்தால் சிங்கமாகவும் வாழ்வது நல்லது!'' என்று அறிவுரை கூறியது. அதன்பின் தான் சிங்கமாகப் பிறக்கவில்லையே என்று நினைத்து வருந்தவே இல்லை. எல்லாம் தூரத்துப் பச்சை என்று புரிந்துகொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


