டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மூன்று வடிகட்டிகள்

பண்டைய கிரேக்க பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் சாக்ரடீஸ். ஒருநாள் அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரைச் சந்தித்து, ""உங்களுடைய நண்பனைப் பற்றி நான் கேள்விப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?''எனக் கேட்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:31 am

தங்க. சங்கரபாண்டியன்

பண்டைய கிரேக்க பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் சாக்ரடீஸ். ஒருநாள் அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரைச் சந்தித்து, ""உங்களுடைய நண்பனைப் பற்றி நான் கேள்விப்பட்டது உங்களுக்குத் தெரியுமா?''எனக் கேட்டார்.

""ஒரு நிமிடம் இருங்கள். நீங்கள் ஏதேனும் அவரைப் பற்றி சொல்வதற்கு முன் நீங்கள் ஒரு சிறிய சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு முப்பிரிவு வடிகட்டி சோதனை'' என்று பெயர் என சாக்ரடீஸ் சொன்னார்.

""மூன்று பிரிவு சோதனையா?''என்றார் வந்தவர். ""ஆம்..., என்னுடைய நண்பனைப் பற்றி சொல்வதற்கு முன் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? என்று யோசித்துவிட்டுப் பிறகு சொன்னால் நன்றாக இருக்கும். அதனால்தான் அதை நான் முப்பிரிவு வடிகட்டி சோதனை என்றேன்'' என்றார் சாக்ரடீஸ்.

""முதல் வடிகட்டி என்பது உண்மை பேசுதலாகும். நீங்கள் என்னிடத்தில் சொல்லப் போவது முற்றிலும் உண்மைதான் என சந்தேகம் இன்றி தெரியுமா?''எனக் கேட்டார் சாக்ரடீஸ்.

அந்த மனிதன், ""இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் நான் அதைக் கேள்விப்பட்டேன். அவ்வளவுதான்'' என்று சொன்னார். ""சரி.., அப்படியானால் அது உண்மையா? பொய்யா? என்று நிச்சயமாகத் தெரியவில்லை அல்லவா? என்றார் சாக்ரடீஸ்.

""இப்பொழுது நற்குணம் என்னும் வடிகட்டியால் இரண்டாவது சோதனையைச் செய்து பார்க்கலாம். நீங்கள் என்னுடைய நண்பனைப் பற்றிக் கூறப்போவது நல்லதா?''என்று கேட்டார் சாக்ரடீஸ்.

""இல்லை. அதற்கு மாறாக கூறப் போகிறேன்''என்றார் வந்தவர்.

""அப்படியானால் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் என தெரியாவிட்டாலும்கூட அவனைப் பற்றித் தவறாக என்னிடம் கூறப் போகிறீர்கள்?''என்றார்

சாக்ரடீஸ்,

""இறுதியாக இன்னொரு வடிகட்டி உள்ளது. இது உபயோகம் என்னும் வடிகட்டி. ஒருவேளை இந்தச் சோதனையில் நீங்கள் வெற்றி பெறலாம். என் நண்பனைப் பற்றி சொல்லப்போவது எனக்கு எந்த விதத்திலாவது உபயோகப்படுமா?''

என்று கேட்டார் சாக்ரடீஸ்.

""உள்ளபடி சொல்வதென்றால்... இது எந்தவிதத்திலும் தங்களுக்குப் பயன்படாது.''

""நீங்கள் என்னிடம் கூறப் போவது உண்மையானதும் இல்லை. நல்லதும் இல்லை. எனக்கு உபயோகப்படப் போவதும் இல்லை. அப்படியானால் அதை என்னிடம் கூறுவதில் என்னதான் பயன்?''என்று தம் பேச்சை முடித்துக்கொண்டார் சாக்ரடீஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.