மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முத்துக் கதை: விளையும் பயிர்

அது ஒரு விளையாட்டு மைதானம். அங்கு கூடைப்பந்து, வாலிபால், முதலிய விளையாட்டுகளை வாலிபர்களும், சிறுவர்களும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

News image
Updated On :14 நவம்பர் 2015, 10:49 am

செல்வகதிரவன்

அது ஒரு விளையாட்டு மைதானம். அங்கு கூடைப்பந்து, வாலிபால், முதலிய விளையாட்டுகளை வாலிபர்களும், சிறுவர்களும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மைதானத்தின் ஓரப் பகுதியில் ஐந்தாறு இளம் சிறார்கள் சின்னப் பந்தை மட்டையால் அடித்து உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் அதிவேகமாக பந்தை ஒரு சிறுவன் அடிக்க பந்து உருண்டோடி ஒரு சின்னக் குழிக்குள் விழுந்து விட்டது. சிறுவர்கள் குழிக்குள் கையை விட்டு பந்தை எடுக்க முயற்சி செய்தார்கள். பந்து கைக்கு எட்டவில்லை. குழி அதிக ஆழமாக இருந்தது. சிறுவர்கள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர். பந்தை எடுக்க இயலாததால் பந்திற்குரியவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அப்பொழுது உடன் இருந்த சிறார்களில் ஒருவன், ""இதற்குப் போய் ஏன் அழுகிறாய்...? பந்தை எடுத்துவிடலாம்...,பயப்படாதே...'' என்கிற நம்பிக்கையை ஊட்டினான். ""எப்படி?''என்று பந்தைப் பறி கொடுத்தவன் வினவினான்.

""அந்தக் கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர முடியுமா?'' என்று கேட்க...,நீர் நிரம்பிய வாளியைக் கொண்டு வந்தார்கள் நண்பர்கள். வாளியில் இருந்த தண்ணீரை அந்தச் சிறுவன் குழிக்குள் ஊற்ற...,பந்து மிதந்து மேலே வந்து விட்டது. பந்துக்குரியவன் முகத்தில் மகிழ்ச்சி. பந்தை பத்திரமாக எடுக்க வழிவகை செய்த சக தோழனின் புத்திக் கூர்மையைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள்! அந்தப் புத்திசாலிப் பையன்தான்........, ஜவஹர்லால் நேரு!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.