

தோகை அழகை வியந்து சொல்லி
தானே பெருமை பட்டது - என்
தோகை போல வேறெங்குமில்லை
என்று செருக்கு கொண்டது!
பறந்து போன கொக்கை அதட்டி
பக்கம் வரவே சொன்னது - உன்னில்
சிறந்த இறகு எனக்குத் தானே
என்று சொல்லி மகிழ்ந்தது!
வண்ண வண்ண வானவில் போல
வடிவில் கூட இருந்தது - என்
எண்ணம் போல எல்லா வண்ணம்
எந்தத் தோகை கொண்டது!
என்னை விடவும் அழகு இல்லை
என்றே புகழ்ச்சி கொண்டது - அது
தன்னை அதிகப் படியாய் எண்ணிக்
கொண்டு ஆட்டம் போட்டது!
கொக்கே உனக்கு வண்ணம் ஒன்றே!
அழுக்காய் கூட கிடக்கிறாய்! - என்று
கொக்கை கோபப் படுத்தி மயிலும்
மகிழ்ந்து இருப்பதைப் பார்க்கிறாய்!
அழகிய மயிலே அனைத்தும் உண்மை
ஆனால் என்போல் பறந்திடு - உன்
அழகை கொண்டு தூர மாகப்
பறக்க முடியா உணர்ந்திடு!
பதுங்கிய நரியைக் கண்டு இரண்டும்
பட்டென இறக்கை அடித்தது - நரி
பதுங்கித் தாவி மயிலைக் கவ்வி
தோகை பிரித்து உண்டது!
கொக்கின் வேகம் தக்க படியாய்
இருந்த தாலே விரைந்தது! - அழகில்
சொக்கி இருந்த மயிலோ நரியின்
உணவாய் மாறி மறைந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசனில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி?

விமலின் வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்!

செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் சென்ற அண்ணாமலை! காரணம் என்ன?
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

