பிர்லா கோளரங்கம்-கொல்கத்தா
வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் வானியல் பற்றிய தகவல்களைப் பொதுமக்களும் புரிந்து கொள்ளவும் கோளரங்கம் உதவுகிறது. இவற்றுள் கொல்கத்தாவிலுள்ள "பிர்லா


வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் வானியல் பற்றிய தகவல்களைப் பொதுமக்களும் புரிந்து கொள்ளவும் கோளரங்கம் உதவுகிறது. இவற்றுள் கொல்கத்தாவிலுள்ள "பிர்லா கோளரங்கம்'தான் இந்தியாவின் முதல் கோளரங்கம் ஆகும்.
அறிவியல் ஆர்வம் கொண்ட அன்றைய பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவுரைப்படி 1960}ஆம் ஆண்டு இதற்கான பணிகள் துவக்கப்பட்டு 29-9-1962}ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப் பட்டது.
இங்குள்ள செலஸ்ட்ரான் தொலை நோக்கி (CELESTRON C-14 TELESCOPE) ST6TCD காமிராவுடன் இணைக்கப்பட்டது. இதனால் வானில் தெரியும் கோள்களை மிக அருகிலும் மிகத் துல்லியமாகவும் காண முடியும்.
இதுவே உலகின் இரண்டாவது மிகப் பெரிய கோளரங்கம் ஆகும். இங்கு செயல்படும் மின்னணு ஆய்வுக் கூடம் வானியல் மட்டுமின்றி பல்வேறு அறிவியல் துறைகளுக்கான தொழில் நுட்பக் கருவிகளை வடிவமைக்கும் பணியையும் செய்து வருகிறது.

இங்குள்ள வானியல் அரங்கம் உலகின் தலைசிறந்த வானியல் அறிஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளது. தினமும் பகல் 12.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை பொதுமக்களுக்கான பார்வை நேரம் ஆகும். வானியல் மற்றும் கோள்கள் பற்றிய தகவல்கள் ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி, ஒரிய மொழிகளில் வழங்கப்படுகின்றன.
முக்கியமாக சந்திரகிரகணம், சூரியகிரகணம் ஏற்படும் காலங்களில் இக்கோளரங்கத்தை பொதுமக்கள் அதிக அளவு பார்வையிடுகின்றர்.
விண்வெளி மட்டுமின்றி சூரியனில் ஏற்படும் மாற்றங்களாகிய கரும்புள்ளிகள், மின் காந்தப் புயல் ஆகியவை பற்றியும் அறிந்து கொள்வதில் கோளரங்கம் ஆற்றும் பணி இன்றியமையாததாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...