வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

நம்பிக்கையூட்டல்!

""எனக்கு கொஞ்சம் செல்ஃபோன் வேணும்மா...,என் ஃபிரெண்ட் சந்தோஷ் கிட்டே பேசணும்'' என்று கேட்டான் ரமேஷ்.

Updated On :

""எனக்கு கொஞ்சம் செல்ஃபோன் வேணும்மா...,என் ஃபிரெண்ட் சந்தோஷ் கிட்டே பேசணும்'' என்று கேட்டான் ரமேஷ்.

 ""இப்ப ஏண்டா சந்தோஷ் கிட்டே பேசணும்?''

 ""ஹோம் ஒர்க்குல ஒரு சந்தேகம்...,அதாம்மா''

 ""நீ பள்ளிக்கூடம் போனேயில்லே...? அப்புறம் என்ன ஹோம் ஒர்க்குல சந்தேகம்?''

 இதைக்கேட்டவுடன் ரமேஷுக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அவன் மெதுவாக, ""இல்லேம்மா...,"கணக்கு பதிவியல்'லே சந்தேகம்..., அதுல வர கணக்கு "டேலி' ஆகலே...,அதுக்காகத்தா..ம்..மா''

 ""சரி...,இந்தா..., பேசிட்டு கொடு...ட'' என்று செல்ஃபோனை அவனிடம் கொடுத்தாள் அம்மா.

 ரமேஷ் சற்றுத் தள்ளிப் போய்ப் பேசினான். ஆனாலும் அவன் முகத்தில் தெளிவு இல்லை.

 ""ஏண்டா...? என்னாச்சு...? ஏன் ஒரு மாதிரி இருக்கே?'' என்றாள் அம்மா.

 ""இல்லம்மா...,சந்தோஷ் கிட்டே கணக்குப் பற்றி கேட்கலாம்னு இருந்தேன். அவன் அவங்க அம்மா அப்பாவோட ஒரு கல்யாண ரிசப்ஷன்ல இருக்கான்....,வர்றதுக்கும் ரொம்ப நேரமாகுமாம்...''என்று கவலையோடு பதிலளித்தான் ரமேஷ்.

 ""சரி, நாளைக்குப் போய் தெரிஞ்சுக்கலாமே...,இப்ப வேற வேலை இருந்தா பாரேன்''

 ""நாளைக்கு இந்த கணக்கைப் போட்டுக்கிட்டு போகணும்...மா...இதுல டெஸ்ட் வேற இருக்கு''

 ""அப்பா இருந்தா உனக்கு உதவியா இருக்கும்...,சரி, அக்கா கிட்டே கேளுடா''

 ""அக்கா இந்த க்ரூப் படிக்கலேம்மா...,அக்காக்கு அக்கெளன்டன்ஸியெல்லாம் தெரியாது'' என்று கவலை தோய்ந்த முகத்துடன் பதில் கூறினான் ரமேஷ்.

 "" ரமேஷ்...,நான் அக்கெளன்ட்ஸ் படிக்கலே...,ஆனா என் பிரெண்ட்ஸ் எல்லாம் படிக்கிறதை பார்த்திருக்கேன். இப்ப நீ கணக்கு போட்டுப் பார்த்த முறையைப் பார்த்தேன். அதுல ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சு போச்சு!'' என்றாள் அக்கா.

 ""என்ன?''

 ""நீ கிளாஸிலே கணக்கு நடத்துனதை ஒழுங்கா கவனிக்கலை...,எந்தப் பாடத்தையும் அதுக்குன்னு உள்ள முறையிலே படிச்சாத்தான் நமக்கு தெரிய வரும்''

 அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.

 ""முதல்லே நீ உட்கார்ந்துகிட்டு இருக்கிற இடத்தைவிட்டு கொஞ்ச நேரம் எந்திரி...,போயி ஒரு டம்ளர் தண்ணீர் குடிச்சுட்டு வா''

 ரமேஷ் அரை மனதுடன் தண்ணீர் குடித்து விட்டு வந்தான்.

Story image

 ""இப்ப அக்கெளண்ட்ஸ் புக்கை எடு...,அதுல கணக்கின் மாதிரி இருக்கும். அதை நல்லா பாரு! கூடவே உங்க சார் நடத்துன கணக்கையும் ஒப்பிட்டுப் பாரு...,ஓரளவுக்குத் தெளிவாயிடும். இதுக்கும் மேல சார் நடத்துனப்ப நீ எழுதிவெச்ச குறிப்புகளையும், விளக்கங்களையும் பாரு..., கணக்கு தானா வரும்.'' என்று பொறுமையாகக் கூறினாள் ரமேஷின் அக்கா லட்சுமி.

 ரமேஷ் சற்று நம்பிக்கை வந்தவனாக நிமிர்ந்து உட்கார்ந்தான். மெதுவாக கணக்கை முயற்சி செய்ய ஆரம்பித்தான்.

 ""இது மட்டும் போதாது ரமேஷ்! நம்மாலும் கணக்கு போட முடியும்னு நீ நம்பணும். நமக்கும் கணக்கு "டேலி' ஆகும்னு நீ நம்பணும். இந்த நம்பிக்கைதான் உனது முயற்சிக்குத் துணையாக நிற்கும். முயற்சி செய்...,உன்னால் முடியும்...'' என்று ஆர்வத்துடன் அறிவுரை கூறினாள்.

 இரமேஷ் ஆச்சரியத்துடன் அக்கா லட்சுமியை நோக்கினான். அவனுள் நம்பிக்கை ஒளி பரவியது! தைரியமாக முயற்சித்தான்! அவ்வப்போது சில தடுமாற்றங்களும் வந்தன. ஆசிரியர் சொல்லும்போது எழுதிய குறிப்புகள் அதற்கு உதவின. மெதுவாகக் கணக்கினைப் போட்டு முடித்தான். ஆச்சரியம் தாங்க முடியவில்லை! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனான்!

 ""அக்கா! தேங்க்ஸ்க்கா...,எனக்கு கணக்கு "டேலி' ஆயிடுச்சு!''

 ""அவ்வளவுதானே...,இதுக்குப்போயி ஏன் டென்ஷன் ஆகுறே? வகுப்புல ஒழுங்கா கவனிச்சா போதும். உன்னால எதுவும் முடியும். நம்மகிட்ட புத்தகம் இருக்கு...சொல்லிக் குடுக்க சார் இருக்காரு. சுயமாக சிந்திக்க மூளை இருக்கு. இதையெல்லாம் ஒருங்கிணைக்கிற முயற்சி இருந்தால் போதும். நீ எதையும் சாதிக்க முடியும்...! இதைவிட பெரிய கணக்கையும் கூட போட முடியும்'' என்றாள் லட்சுமி.

 அவளையே நம்பிக்கையோடு நோக்கினான் ரமேஷ். அடுத்தநாள் பள்ளி முடிந்தது. ரமேஷ் வேகவேகமாக வீட்டிற்கு வந்தான். அதற்குள் அக்கா லட்சுமியும் வீட்டிற்கு வந்திருந்தாள்.

 ரமேஷ் பரபரப்புடன் தனது புத்தகப்பையை திறந்தான். அதிலிருந்து ஒரு விடைத்தாளை எடுத்தான். ""அம்மா...,அக்கா...,இங்க வாங்களேன்'' என்று கூவி அழைத்தான்.

 இருவரும் வேகமாக வந்தனர். அன்று நடந்த தேர்வில் அவன் முழு மதிப்பெண் பெற்றிருந்தான்! ஆசிரியர் அவனைப் பாராட்டி, "மேலும் முயல்க, முழு மதிப்பெண் பெறுக, உன்னால் முடியும்' என்று குறிப்பு எழுதியிருந்தார்!

 அம்மா மிகுந்த மகிழ்ச்சியோடு அவனைப் பாராட்டினாள்!

 ""அக்காவிற்கு தேங்க்ஸ் சொல்லுடா...,''என்று மகிழ்ச்சியில் மகள் லட்சுமியையும் சேர்த்துக்கொண்டாள்!

 ""அக்கா....,ரொம்ப தேங்க்ஸ்க்கா''

 லட்சுமி அவனுக்குக் கை கொடுத்தாள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.