
இங்கிலாந்தில் உள்ள "ஈகிள்ஸ் ஃபீல்டு' என்னும் கிராமத்தில் 1766ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 6ஆம் தேதி ஜான் டால்ட்டன் பிறந்தார். இவருடைய கிராமத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இவரே அதிகம் படித்தவராக இருந்தார்.
சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தை தன்னுடைய வீட்டிலேயே ஆரம்பித்து சேர்ந்தவர்களுக்கு இலவசமாக பேப்பர், பேனா, இங்க், ஆகியவற்றை வழங்கினார்.
தன் சகோதரர்களுடன் சேர்ந்து "கெண்டல்' என்ற பக்கத்துக் கிராமத்தில் பெரிய பள்ளிக்
கூடத்தை ஆரம்பித்தார். அந்தச் சிறிய நகரத்தில் மிகப் பெரிய மனிதராக விளங்கினார். பல்வேறு இடங்களில் விஞ்ஞானச் சொற்பொழிவுகளை நடத்தினார். மான்செஸ்டர் நகரில் உள்ள மத சம்பந்தமான கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தார்.
அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நிறக்குருடு பாதிப்பு ஏற்பட்டது. நீல நிறத்திற்கும் சிவப்பு நிறத்திற்கும் வேறுபாடு தெரியவில்லை. அதைப் பற்றிய ஆராய்ச்சியும் நடத்தினார். மான்செஸ்டர் நகரத்தில் உள்ள அறிவியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!
இங்கிலாந்து நாட்டில் உள்ள ராயல் சொசைட்டிக்கும் பிரான்ஸ் நாட்டில் உள்ள அகாடெமிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜான் டால்ட்டன்!
கனிமங்கள் பற்றிய ஆய்வை நடத்தினார். அணுக்கொள்கை, அணுவைப் பற்றிய ஆய்வுகளுக்கு அடிப்படையாக இது விளங்கியது. பிற்காலத்தில் அணு ஆராய்ச்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபடக் காரணம் சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்னர் டால்ட்டன் கூறிய அணுக் கொள்கையே ஆகும்.
ஜான் டால்ட்டன் ஒவ்வொரு நாளும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக அன்றைய வெப்பநிலை, காற்றின் அழுத்தம், ஆகிய குறிப்புகளை எழுதிக் கொண்டு வந்தார். சுமார் 50 வருடங்கள் இக்குறிப்புகளை அவர் பதிவு செய்திருந்தார்.
1844ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் இரவு பாரமானியைப் பார்த்து அளவுகளைக் குறிக்கும்போது கைகள் நடுங்கின. பயம் வந்தது. "கொஞ்சம் மழை...' என்று எழுதினார். பேனா கீழே விழுந்தது. பேனாவை எடுத்தார். "...இன்று மாலை பெய்தது' என்று எழுதி முடித்தார். படுக்கையில் சாய்ந்தார். பொழுது விடியும்போது ஜான் டால்ட்டன் கண்விழிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

