சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பென்சில்!

வண்ணம் பலவும் கொண்டதேவாயில் கூர்மை உள்ளதே

News image
Updated On :19 செப்டம்பர் 2015, 10:05 am

ஆா். கதிரவன்

தலையைச் சீவக் கரைந்திடும்

தாளில் படங்கள் வரைந்திடும்!

கலையை உணர்த்தும் எழுதுகோல்

கார்பன் உள்ள பென்சிலே!

வண்ணம் பலவும் கொண்டதே

வாயில் கூர்மை உள்ளதே

எண்ணும் எழுத்தும் மலருதே

எல்லோ ருக்கும் உதவுதே

எளிதில் அழித்துக் கொள்ளலாம்

எளிதில் அளித்து மகிழலாம்

வெளியில் கண்டு, கேட்டவை

விவரம் பலவும் எழுதலாம்

பிறருக்காகத் தன்னையே

புவியில் கொடுத்துக் கலையினைத்

திறந்து வைக்கும் பென்சில்போல்

தியாகம் செய்தே வாழுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.