சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

கணிதமேதை, இயற்பியல் அறிஞர் பிளேய்ஸ் பாஸ்கல்!

தற்போது கணக்கிடுவதற்குப் பயன்படும் கால்குலேட்டர் கருவியின் முன்னோடி பிளேய்ஸ் பாஸ்கல்!

Updated On :

தற்போது கணக்கிடுவதற்குப் பயன்படும் கால்குலேட்டர் கருவியின் முன்னோடி பிளேய்ஸ் பாஸ்கல்!

1623ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிரான்ஸில் "கிளர்மாண்டு ஃபெரண்ட்' என்ற இடத்தில் பிறந்தார். நீர்மங்களின் பண்புகள் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்ட பாஸ்கல், அறிவியல் அறிஞர் டாரிசெல்லியின் ஆய்வுகளை விரிவுபடுத்தி அழுத்தம் மற்றும் வெற்றிடம் தொடர்பான கொள்கைகளை தெளிவுபடுத்தினார்! கணிதத்தில் வடிவியல் மற்றும் நிகழ் தகவு கோட்பாடுகள் தொடர்பாகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்!

Story image

கணிப்பொறிகளின் வடிவமைப்புக்கு முன்னோடியாக விளங்கிய "பாஸ்கலைன்' என்ற கருவி கூட்டல், கழித்தல் வேலைகளை மட்டும் செய்யக் கூடியதாகும்!

ஜெர்மனியில் "டிரஸ்டன்' என்ற இடத்தில் உள்ள "ஜூவிங்கர்' அருங்காட்சியகத்தில் பாஸ்கல் வடிவமைத்த கால்குலேட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது! இவர் தன் தந்தையிடமே கல்வி பயின்றார்! பிளேய்ஸ் பாஸ்கல் நினைவாக அழுத்தத்திற்கான "எஸ்.ஐ.யூனிட்டுக்கு பாஸ்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது!

இவர் 1662ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் நாள் தன் 39ஆவது வயதில் காலமானார்!

தொகுப்பு-

கோட்டாறு ஆ.கோலப்பன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.