ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மை நிரப்பும் பேனாவைக் கண்டுபிடித்தவர்

பறவைகளின் இறகு பேனாவாகப் பயன்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பவுண்டன் பேனா உபயோகத்துக்கு வந்தது.

News image
Updated On :4 ஏப்ரல் 2016, 1:50 am

பறவைகளின் இறகு பேனாவாகப் பயன்படுத்தப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பவுண்டன் பேனா உபயோகத்துக்கு வந்தது.

லூயிஸ் வாட்டர்மேன் என்பவர்தான் பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்தார். இவர் அமெரிக்காவின் ஓர் இன்சூரன்ஸ் நிறுவன சேல்ஸ்மேன் ஆவார். முதலில் வடிவமைக்கப்பட்ட பவுண்டன் பேனா எப்படி இருந்தது தெரியுமா? மையை அடைத்து வைக்க ஏதுவாக, கடினமான ரப்பரால் செய்யப்பட்ட குழாயும், அதன் அடியில் "நிப்'பும் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வகை பவுண்டன் பேனாவால் மென்மையாக காகிதத்தில் எழுத முடியாமல் போனது. இந்தப் பேனாவை வைத்து எழுதியதால், மை தாறுமாறாகக் கொட்டி வாட்டர்மேனின் மதிப்புமிக்க இன்சூரன்ஸ் ஒப்பந்தப் பத்திரங்களெல்லாம் வீணாகின. அதனாலேயே வாட்டர்மேனுக்கு ஒரு சூப்பர் பேனா உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாகத் தோன்றியது. அப்படி அவர் வடிவமைத்ததுதான் சரியாக எழுதக்கூடிய பவுண்டன் பேனா. பழைய பவுண்டன் பேனாவின் நிப்பில் ஒரு துளை மற்றும் வேண்டிய இயந்திர நுட்ப வசதிகளைச் சேர்ப்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது. அதைச் செயல்படுத்திப் பார்த்தார். பவுண்டன் பேனா உருவானது.

வாட்டர்மேன் கண்டுபிடித்த பவுண்டன் பேனா மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டது. நிப், அதன் அடியில் பொருத்தப்படும் கருப்புக் கட்டை (ஃபீடர்). இந்த இரண்டையும் உள்வாங்கிக் கொள்ளும் சிறு உருளை ஆகியனவாகும். எல்லா பேனாக்களும் ஒரு மை நிரப்பிக் கொள்ளும் கலனை முக்கியமாகக் கொண்டுள்ளன.

லூயிஸ் வாட்டர்மேன் தனது முதல் பவுண்டன் பேனா கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 1884ஆம் ஆண்டில் பதிவு செய்தார்.

1702-ஆம் ஆண்டு ""எம்.பயான்'' என்ற பிரெஞ்சுக்காரர் பவுண்டன் பேனாவை வடிவமைத்தார்.

பேனா தயாரிப்புக்காக முதல் அமெரிக்கக் காப்புரிமையை, பியரி கிரீன் வில்லியம்சன் என்பவர் 1809ஆம் ஆண்டில் பெற்றார்.

பாதி இறகாலும், பாதி உலோகத்தாலும் தயாரிக்கப்பட்ட பேனாவுக்காக 1819ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காப்புரிமையை ஜான் செப்பர் என்பவர் பெற்றார்.

1831ஆம் ஆண்டில் மை நிரப்புவதற்காக தானே உறிஞ்சுக் கொள்ளும் தன்மையுள்ள பவுண்டன் பேனாவை ""ஜான் ஜேக்கப் பார்க்கர்'' என்பவர் கண்டுபிடித்தார். இவர் பெயரில் உருவான பார்க்கர் நிறுவன பேனாக்கள் மிகவும் பிரபலமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.