தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

முயற்சி பொன்மொழிகள்

முயற்சி என்பது இதயத்துள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல ஆற்றலைக் கிளப்பும்

Updated On :15 ஏப்ரல் 2016, 9:00 am

* முயற்சி என்பது இதயத்துள் மூளும் வெறும் உணர்வு மட்டுமல்ல ஆற்றலைக் கிளப்பும்

ஒரு தூண்டுகோல் அது.

-தாகூர்

* சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம். அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.

-கௌப்பர்

* குழந்தைகளுக்குப் பொருள் தேடி வைப்பதினும் முயற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துவதே

குழந்தைகளுக்குச் செய்யும் உபகாரமாகும்.

-வாட்லி

*  பெரியோர் அடைந்து அனுபவிக்கும் உயரிய ஸ்தானங்கள் திடீரென்று பெறப்பட்டவை அல்ல! பிறர் தூங்கும்பொழுது அவர் இரவில் இடைவிடாது வேலை செய்தவராவர்!

-லாங்ஃபெல்லோ

* எதுவும் தாமாக வருவதில்லை.

எல்லாவற்றையும் தேடியே ஆக வேண்டும்.

-பக்ஸ்டன்

* முயன்று பார்க்கும் வரை தன்னால் முடியக்

கூடியது இதுவென்று ஒருவனும் அறியான்.

-பப்ளியஸ்ûஸரஸ்

* "கடவுள் நன்மை செய்வார்' என்ற நம்பிக்கைக்கு அடுத்த நம்பிக்கை "முயற்சி நலம் தரும்' என்பதில் உள்ளதாகும்!

-போவி

* முயற்சியில்லாத இடத்தில் எதுவும்

விளங்குவதில்லை.

-ஸோபாக்கிளிஸ்

* எதிலேனும் சிறந்து விளங்குவதற்காக எத்தகைய முயற்சிக்கும் அஞ்சாதீர்.

-ஸெனீக்கா

* நல்ல காரியங்கள் என்பனவற்றை நாமாகத் தேடிச் செய்ய வேண்டுமேயல்லாது நல்ல

காரியங்கள் தாமாக வந்து சேர்வதில்லை.

-கார்பூல்ட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.