டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கெட்டிக்காரன் புளுகு!

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் ஒன்று  உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் சேவல் கூவியது! உற்சாகம் மேலிட பலதடவை கூவியது!

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:05 pm

தங்க. சங்கரபாண்டியன்

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் ஒன்று  உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் சேவல் கூவியது! உற்சாகம் மேலிட பலதடவை கூவியது!

சேவலின் குரலைக் கேட்ட ஒரு நரி அங்கே வந்தது. நரிக்கு நல்ல பசி! கூவிக்கொண்டிருந்த சேவலைப் பிடித்துச் சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால் சேவல் மரத்தின் உச்சியில்  இருந்ததால்  அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக நரி ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப் பார்த்து, ""சகோதரரே! வணக்கம்! ஒரு நல்ல செய்தியை நீ கேள்விப்பட்டாயா? பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது!...இனி ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது...,அன்பாக நடந்து கொள்ள வேண்டும்...சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன்! இந்த நல்ல செய்தியைப் பற்றிப் பேசுவோம்.'' என்றது.

 நதியின் தந்திரப் பேச்சை சேவல் புரிந்துகொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப்போல தலையைத் தூக்கிப் பார்த்தது.

 இதனைக் கண்ட நரி, ""என்ன சகோதரா! ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே! அங்கே என்ன இருக்கிறது?'' என்று கேட்டது.

 அதற்கு சேவல், ""சற்று தூரத்தில் வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள்தானா என்பதைக் கவனிக்கிறேன்.'' என்றது!

 அவ்வளவுதான்! நரிக்கு உடல் நடுங்கியது.

""சரி...,சரி...! நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்'' என்று கூறி கிளம்பியது.

 சேவல், நரியிடம், ""அருமை சகோதரா! போகாதே. நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்?...இப்போதுதானே நீ சொன்னாய்! எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது....என்று!'' என்றது.

 அதற்கு நரி ""அந்த ஒப்பந்தத்தைப் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால்....?...என் கதி என்ன ஆவது?...நான் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிக் காட்டுக்குள்  மறைந்து விட்டது.

 சேவல், ""யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? உன்னுடைய கெட்டிக்காரப் பொய்கள் என்னிடம் பலிக்காது'' என்று கூறிச் சிரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.