கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கடமைக்குப் பரிசு!

மேதை சர் சி.பி.இராமசாமி ஐயர் ஒருநாள் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தன் காரில் விரைந்து கொண்டிருந்தார்.

News image
Updated On :29 ஏப்ரல் 2016, 5:30 pm IST

மேதை சர் சி.பி.இராமசாமி ஐயர் ஒருநாள் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தன் காரில் விரைந்து கொண்டிருந்தார். ஆங்கிலப் போலீஸ் அதிகாரி ஒருவர் அவர் காரை மறித்து, ""இங்கு இராணுவப் பயிற்சி நடைபெறுகிறது. நீங்கள் இவ்வழியாகச் செல்ல அனுமதியில்லை வேறு வழி செல்லுங்கள்'' என்றார்.

"நான் யார் தெரியுமா?' என்றார் சர் சி.பி. "நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் என் மேலதிகாரி உத்தரவை நான் மீற முடியாது' என்றார் அதிகாரி. வேறு வழியின்றி தன் காரை வேறு வழியாக ஓட்டிக்கொண்டு போகச் சொன்னார். தன் அலுவலகம் போய்ச் சேர்ந்ததும் முதல் வேலையாகத் தலைமைப் போலீஸ் அதிகாரியை வரவழைத்தார்.

அவரிடம் தன் வழியை மறித்த அந்த காவலரின் கடமை உணர்ச்சியைத் தெரிவித்து அவருக்குப் பரிசளிக்கக் கட்டளையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.