மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முத்துக் கதை: வழி காட்டுதல்

ஓர் ஊருக்குச் செல்கிறபோது ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கு செல்ல வேண்டும்

News image
Updated On :6 பிப்ரவரி 2016, 11:03 am

ஓர் ஊருக்குச் செல்கிறபோது ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கு செல்ல வேண்டும்

எவ்வளவு நேரம் ஆகும்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஊரைச் சேர்ந்தவன், ""மெதுவாகப் போனால் விரைவில் அடைந்து விடலாம். விரைவாகப் போனால் நீண்ட நேரம் ஆகும்'' என்று பதில் சொன்னான். இப்பதில் முதியவருக்கு வியப்பைத் தந்தது.

 அந்த ஊரை அடைய முதியவர் வேகமாக நடக்க முற்பட்டார். அந்தப் பாதை மேட்டுப்பாங்கான, கரடு முரடான சரளைக் கற்கள் நிறைந்த பாதையாகவும் இருந்தது. எனவே அதில் அவர் அடிக்கடி சறுக்கி விழ நேர்ந்தது. அடிக்கடி விழுந்த காரணத்தினால் உடலில் சிராய்ப்புடன் ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. மேலும் முதியவருக்கு மிகவும் களைப்பு ஏற்பட்டது. தான் செல்ல விரும்பிய இடத்தை அடைவதற்கு அவர் வெகு நேரம் எடுத்துக் கொள்ளும்படி ஆனது.

 ஆனால் இளைஞன் மட்டும் மெதுவாக தனது இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பாதையை கவனமுடன் கவனித்துக் கடந்ததால் எங்கும் அவன் சறுக்கவில்லை. விழவுமில்லை. நிதானமாகச் சென்றதனால் உரிய நேரத்தில் இளைஞன் இலக்கை அடைந்தான்.

 எத்தகைய பாறையாக இருந்தாலும் வேகமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை முதியவருக்கு!

 எத்தகைய பாறையாக இருந்தாலும் நிதானமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை இளைஞனுக்கு!

 வழிகாட்டியின் சொல்லை மதிக்காமல் சென்றதால் தோல்வியுற்றார் முதியவர்!

 வழிகாட்டியின் சொல்லை மதித்ததால் இலக்கை எளிதில் அடைந்தான் இளைஞன்!   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.