குட்டிப் பாப்பா ஆசை கொண்டு
சுட்டித் தனமாய் அமரும் ஆனை!
கட்டிக் கரும்பாய் பேசும் பாப்பா
கட்டிப் பிடித்தே ஒட்டிய ஆனை!
அன்னம் போல அசையும் ஆனை
எண்ணம் போல ஏறிடக் குனியும்!
குழந்தைக்காகக் குனிந்தார் அப்பா!
அழகாய் முதுகில் அமர்ந்தாள் பாப்பா!
அட்டைக் கரி போல் நிறமில்லாமல்
சட்டை வேட்டி அணிந்த ஆனை!
கொம்பில்லாமல் கொஞ்சும் ஆனை
வம்பில்லாமல் நகரும் ஆனை!
மணியில்லாமல் கலகல வென்று
குனியும் ஆனை! குழந்தையும் சிரிக்கும்!
காட்டுக்குள்ளே போகப் பயந்து
வீட்டைச் சுற்றும் வேடிக்கை ஆனை!
சும்மா சும்மா தலையை ஆட்டும்!
கும்மாளந்தான் குழந்தைக் கெல்லாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


