ஒருசமயம் ஒருவன் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரிடம் வந்து, ""நான் வெளியூர்க்காரன். என்னிடமிருந்த பணமெல்லாம் திருட்டுப் போய்விட்டது. நான் ஊருக்குத் திரும்பிப்போக உதவி செய்யுங்கள்'' என்று கேட்டான்.
வித்தியாசாகர் அவனுக்கு தாராளமாகவே பணம் கொடுத்தார்.
பணம் பெற்றுக் கொண்டவன் வெளியே வந்து அங்கிருந்த தன் நண்பனிடம் ""இந்த வித்தியாசாகர் சரியான ஏமாளி. இவரை ஏமாத்தறது ரொம்ப சுலபம்'' என்று சொல்லிக்கொண்டு போனான்.
இவற்றை வித்தியாசாகரின் நண்பர் ஒருவர் பார்த்துவிட்டார். அதனால் மனம் வருந்தி ""நீங்க ஏன் இந்த மாதிரி எல்லாருக்கும் உதவி பண்ணி ஏமாந்து போறீங்க?'' என்று கேட்டார்.
""உதவி செய்யறபோது ஒவ்வொரு சமயம் இந்த மாதிரி ஏமாறத்தான் நேரும். இதற்காக ஒருத்தருக்கும் உதவாமே இருந்தால் உண்மையாகவே கஷ்டப்படறவங்களுக்கு உதவி கிடைக்காம போயிடும். பிறரை ஏமாத்தறதைவிட ஏமாந்து போறது எவ்வளவோ மேல்'' என்று பதில் அளித்தார் பண்டித வித்தியாசாகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


