மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முத்துக் கதை: மனிதம் என்பது இதுதான்..!

அவனுக்கு சின்னஞ்சிறு வயது. அதாவது அடுத்தவர்கள் கையைப் பிடித்து நடக்கிற குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவனது தந்தை இறந்து விடுகிறார்.

News image
Updated On :5 மார்ச் 2016, 11:58 am

செல்வகதிரவன்

அவனுக்கு சின்னஞ்சிறு வயது. அதாவது அடுத்தவர்கள் கையைப் பிடித்து நடக்கிற குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தில் அவனது தந்தை இறந்து விடுகிறார். என்ன நடந்திருக்கிறது...? இனி என்ன நடக்கப் போகிறது...? என்று அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை. உற்றார், ஊரார், உறவினர் ஆகியோர் அவனைப் பரிவோடு பார்த்துப் பரிதாபப்பட்டார்கள்.

இறந்து போன அப்பாவின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்படுகிறது. அடக்கம் செய்வதற்கு கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். பாதிரியார் வந்தார். இறந்தவரின் பெருமைகளைப் பற்றி சொன்னார். பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டினார்.

பிரார்த்தனை செய்தார். பரமபிதாவிடம் உருகினார். அடக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் கண்களை மூடி கசிந்துருகி பிரார்த்தனையில் மூழ்கினர்.

அந்த இளந்தளிர், சவப்பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஈரமான அந்தக் குழிக்குள் இருக்கிற சவப்பெட்டியின் மீது தவளை ஒன்று உட்கார்ந்திருந்தது. எப்படி எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை.

ஜெபம் முடிந்தது. பாதிரியார் ஒரு பிடி மண்ணை எடுத்துக் குழியில் போட்டார். மற்றவர்களும் குழியில் தள்ளினர்.

அப்போது அந்தக் குழந்தை பதறினான். ""பார்த்து... பார்த்து அந்த தவளை செத்துவிடப் போகிறது...'' என்று மழலை மொழியில் அலறினான். சவப்பெட்டி மீது இருந்த தவளை செத்துவிடக் கூடாதென பதறிய பாலகன் யார் தெரியுமா...?

அவன்தான் ரஷிய நாவலாசிரியர் மாக்சிம் கார்க்கி. அவனது பதற்றத்திற்கு பெயர்தான் மனிதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.