ஓர் ஊரில் ஒரு பணக்கார கருமி இருந்தான். நிறைய பணம் சேர்த்தான். அதை அனுபவிக்க அவனுக்கு மனம் வரவில்லை! செலவாகி விடுமே என்ற பயம்தான் காரணம்! பிறருக்குக் கொடுத்து உதவவும் அவனுக்கு பயம்! தன் செல்வம் குறைந்து விடுமே என்ற பயம்தான்!ஒரு பெட்டியில் பணம் மற்றும் நகைகளைப் போட்டான். பிறகு பெட்டியைத் தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான். புதைத்து வைத்தான். தினமும் ஒரு முறை திறந்து பார்த்து சந்தோஷப்படுவான். வருடங்கள் சென்றன. ஆனால் அவன் தன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை! வருடக்கணக்காக செல்வம் அப்படியே இருப்பது பற்றி அவனுக்கு சந்தோஷம்! ஒரு நாள் அதைத் திருடன் ஒருவன் பார்த்துவிட்டான். திருடன் கருமிக்குத் தெரியாமல் அந்தப் பணப் பெட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டான்! அடுத்தநாள் கஞ்சன் பெட்டியைப் புதைத்த இடத்தைத் தோண்டி தன் செல்வத்தைப் பார்க்க நினைத்தான். பெட்டியைக் காணவில்லை! பதறிப்போனான்! சப்தம் போட்டு அழ ஆரம்பித்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்தனர்.
அந்தக் கருமியிடம் அவர்கள்,""அது இருந்தும் அதை நீயும் அனுபவிக்கவில்லை. அடுத்தவர்களுக்கும் எதுவும் நல்லது செய்யவில்லை. தோண்டாமலே இருந்தால் அது இருப்பதாகத்தானே நினைத்துக் கொண்டிருப்பாய். காணாமல் போனால் என்ன? தோண்டாமல் அது இருப்பதாக நினைத்து திருப்திப்பட்டுக் கொள்.'' அதை விட்டுவிட்டு ஏன் இப்படி அழுகிறாய்?'' என்று கேட்டனர். சரிதானே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலைக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே இன்று சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


