மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மனம் மாறிவிட்டது!

அந்தக் கடைக்காரர் மிகவும் நல்லவர். எல்லார் மீதும் அன்பு கொண்டவர். கடவுள் பக்தி உள்ளவர். நல்ல குரலில் பகவான் மீது பாட்டுக்கள் பாடுவார்.

News image
Updated On :11 நவம்பர் 2017, 5:43 am

மயிலை மாதவன்

அந்தக் கடைக்காரர் மிகவும் நல்லவர். எல்லார் மீதும் அன்பு கொண்டவர். கடவுள் பக்தி உள்ளவர். நல்ல குரலில் பகவான் மீது பாட்டுக்கள் பாடுவார். அவர் நடத்தி வந்த கடையை சாப்பாட்டுக்குச் செல்லும்போது மூடமாட்டார். அந்தப் பக்கம் வருபவர்களிடம் கடையை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று வருவார். 
ஒருநாள், திருடர் கூட்டத்தின் தலைவன் சாப்பாட்டு நேரத்தில் கடைக்கு வந்திருந்தான். அவனைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கடைக்காரர் வீட்டுக்குப் போனார்.  
வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்து, பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு வைத்தான் திருடன். 
அப்போது அங்கு வந்த திருடர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன், கடையில் தலைவனைப் பார்த்ததும் மகிழ்ந்து, ""இதைப் போன்ற நல்ல வாய்ப்பு கிடைக்குமா..? எல்லாவற்றையும் திருடிவிடலாமே..!'' என்றான். 
""என்னை நம்பிக்கை துரோகம் செய்யச் சொல்கிறாயா...? பிறரை அடித்துப் பிடுங்கலாம்...! ஆனால், நம்பிக்கை துரோகம் மட்டும் செய்யக்கூடாது..!'' என்று கோபமாகச் சீறினான் திருடர் தலைவன். 
திரும்பி வந்த கடைக்காரரிடம் ""எல்லாம்  சரியாக இருக்கிறதா... என்று பார்த்துக் கொள்ளுங்கள்...'' என்றான் திருடர் தலைவன். 
""உன்னை நம்பித்தான் கடையை ஒப்படைத்தேன். அப்படியிருக்க... நானே சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாமா...?''என்று கேட்டார். 
இந்த பதிலைக் கேட்ட திருடனுக்கு மனமாற்றம் உண்டாயிற்று. "ஒரு நல்லவரோடு ஒரு நிமிட நேரம் இருந்ததில் நல்ல பலன் உண்டாகிவிட்டது' அவன் அவர் காலில் விழுந்து, ""ஐயா...! நான் திருடர் கூட்டத் தலைவன். தங்கள் நல்ல குணத்தைக் கண்டு என் மனம் மாறிவிட்டது. இனி திருட மாட்டேன்.... என்று சத்தியமாகச் சொல்கிறேன்...!'' என்று தேம்பித் தேம்பி அழுதான். 
-இப்படி திருடனின் மனதை மாற்றிய கடைக்காரர் - ஞானி துக்காராம்.

(நல்லி குப்புசாமி செட்டியாரின் "வழி காட்டும் கதைகள்' நூலிலிருந்து...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.