மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

முத்துக் கதை: விளையும் பயிர்!

பூனாவிலுள்ள பெர்கூசன் கல்லூரி ஆசிரியராக இருந்தார் பால கங்காதர திலகர். அவர், கல்லூரி முதல்வரிடம், ""பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது.

News image
Updated On :18 நவம்பர் 2017, 7:59 am

மயிலை மாதவன்

பூனாவிலுள்ள பெர்கூசன் கல்லூரி ஆசிரியராக இருந்தார் பால கங்காதர திலகர். அவர், கல்லூரி முதல்வரிடம், ""பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது. பொருளாதாரத்தில் கெட்டிக்காரனாக உள்ள ஒரு மாணவனை அனுப்புங்கள்..., நான் சொல்லச் சொல்ல அவன் எழுதட்டும்...'' என்றார்.  முதல்வர் "தேஷ்முக்' என்ற மாணவரை அனுப்பி வைத்தார். 

தேஷ்முக், திலகரின் இருப்பிடத்திற்கு வந்தார்.  அங்கு திலகரைப் பார்க்க யார் யாரோ காத்துக் கொண்டிருந்தனர். திலகர் அவர்களிடம் பேச வேண்டியிருந்தது. அவரால் தேஷ்முக்கிடம்  தான் எழுத நினைத்ததைச் சொல்ல முடியவில்லை. 

திலகரின் கஷ்டத்தை உணர்ந்தார் தேஷ்முக்.  அவர் திலகரிடம், ""தாங்கள் எழுத விரும்பும் விஷயத்தைப் பற்றிச் சில குறிப்புகள் மட்டும் சொல்லுங்கள். நான் கட்டுரை எழுதிக் கொண்டு வருகிறேன். ஏதேனும் திருத்தம் இருந்தால் பிறகு சரி செய்து கொள்ளலாம்...'' என்றார்.

இதைக் கேட்டு திலகர் சிரித்தார். இருந்தாலும் சில குறிப்புகளைச் சொன்னார். 

மறுநாள் தேஷ்முக் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் படித்துவிட்டு திலகருக்கு வியப்பு தாங்க முடியவில்லை! அத்தனை நன்றாக தேஷ்முக் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். திலகருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ""நீ நாட்டின் நிதித் துறையில் மிகப் பெரிய பதவிக்கு வருவாய்!'' என்று மனப்பூர்வாக ஆசீர்வதித்தார்.

பெரிவர்களின் ஆசீர்வாதம் வீணாகப் போகுமா?  அதன்படியே தேஷ்முக் ரிசர்வ் வங்கியின் கவர்னரானார்!!  அதுதான் திலகர் சொன்ன மிகப் பெரிய பதவி என்று தேஷ்முக் நினைத்தார். அதைவிடப் பெரிய பதவி அவருக்குக் காத்திருந்தது! அதுதான் பாரதத்தின் நிதி மந்திரிப் பதவி!!

(நல்லி குப்புசாமி செட்டியாரின் வழிகாட்டும் கதைகள் என்ற நூலிலிருந்து.....)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.