நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஞானக்கிளி! - 12:  இங்கே ஏன் வந்தே?

ஞானம் கேட்டது...""இன்று என்ன சிறப்புச் செய்தி?''

News image
Updated On :4 ஆகஸ்ட் 2018, 4:30 am

பூதலூர் முத்து

ஞானம் கேட்டது...""இன்று என்ன சிறப்புச் செய்தி?''
""வழக்கம்போல் வருத்தமும், மகிழ்ச்சியும் கலந்த செய்திதான்!'' என்றாள் சிவகாமி.
""எல்லோரும் தெரிஞ்சுக்கறோம்....என்ன செய்தி?...சொல்!''
""பள்ளியிலே ஒரு நிகழ்ச்சி....பூவரசுன்னு ஒரு பையன்..., எட்டாம் வகுப்பு படிக்கிறான்....அவனுடைய  சிங்கப்பூர் மாமா அவனுக்கு ஒரு பேனா வாங்கி வந்தார்...அந்தப் பேனா தொலைஞ்சு போச்சு!
...பூவரசுக்கு குமார்ங்கற பையன் மேலே சந்தேகம்....பள்ளிக்கூடம் விட்டதும் அவனை மறிச்சான்...."என் பேனாவைக் கொடு' ன்னான்...."நான் எடுக்கவே இல்லே'ன்னு குமார் சொல்லியும் பூவரசு கேட்கலே.... அடிக்கப் போனான்...அப்போது பூவரசுக்குப் பழக்கமான வேலன் வந்து மறிச்சான்....''
""பார்! இவன் பார்வையே சரியில்லே...'' என்றான் பூவரசு.
""அவன் மதியம் சாப்பிடவேயில்லே...'' என்றான் வேலன்.
""உனக்கு என்ன தெரியும்....விலகு!....அவனை விடக்
கூடாது''
வேலன் இருவரையும் விலக்கிவிட...குமார் போய்விட்டான்.
""பூவரசு, கொஞ்சம் பொறுமையா இரு...நான் சொல்வதைக் கேள்...''
""நீ எதுவும் பேசாதே....அவனைச் சோதனை போட நினைச்சேன்....நீ குறுக்கே வந்திட்டே....நீ இதிலே தலையிடாதே...''
வேலன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லே...
மாலை.....பூவரசு தாமதமாக வீட்டுக்கு வந்தான்....உள்ளேயிருந்து  வேலன் வெளியே வந்தான்!
""இங்கே ஏன் வந்தே?....
என்னைப் பற்றிப் புகாரா?''
வேலன் பதில் எதுவும் பேசாமல் போய்விட்டான்.
""அம்மா!...இந்தப் பயல் வேலன் ஏன் இங்கே வந்தான்?...''
அவள் பதில் பேசவில்லை....கையிலிருந்த ஒரு பொருளைக் காட்டினாள். அவன் கண்களையே நம்ப முடியவில்லை....சிங்கப்பூர் பேனா!....
""எப்படிம்மா?''
""இது விளையாட்டுத் திடலில் கிடந்திருக்கு.... வேலன் எடுத்திருக்கான்.... உன்னுடையதுன்னு தெரியலே... .விளையாட்டு ஆசிரியரிடம் ஒப்படைச்சிருக்கான்....அதைச் சொல்ல வந்த அவனை நீ 
பேசவே விடலையாம்....''
பேனா கிடைத்த மகிழ்ச்சியைவிட ஒன்றும் அறியாத குமார் மீத திருட்டுப்பட்டம் கட்டி அவன் மனசைக் காயப்படுத்தினோமே என்ற வருத்தம் அவனை வாட்டியது. வேலன் பேச்சைக் கேட்டிருந்தால் இந்தத் தவறு நடந்திருக்காதே....என நினைத்தான். அவர்களிடம் மன்னிப்புக் கேட்க ஓடினான்.
கதையைக் கேட்ட எல்லோருக்கும் வருத்தமாக இருந்தது. 
பீட்டர் ஞானத்தைப் பார்த்தான். 
""ஏதாவது சொல்லணுமா?...சொல்...'' 
""நாம் ஒருத்தரை அவசரப்பட்டு பாராட்டலாம்!....ஆனா குற்றம் சொல்லக்கூடாது....குறை காணக்கூடாது...உண்மை தெரியும் வரை பொறுமை வேணும்!''
""சரியாச் சொன்னே....பிறர் கருத்தையும் கேட்கணும்....சொல்ல வாய்ப்புத் தரணும்....இல்லேன்னா பல உண்மைகள் வெளியே வராமலே போகும்!.... அவை வெளியே வர பல ஆண்டுகள் கூட ஆகலாம்! நட்புச் செடியை வளர்ப்பதற்கு பதிலாக பகை என்னும் முள்செடியை வளர்க்கலாமா?....அதனால் யாருக்கு என்ன லாபம்?''
ஞானத்தின் கேள்வி எல்லோருக்கும் ஒரு சிந்தனையைத் தந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.