துளசி செடிகள்!: ஞானக்கிளி! - 8
""நீ என்ன சொல்றே?'' என்ற பாட்டியின் கேள்வியோடு நிறுத்திய ஞானக்கிளி தொடர்ந்தது!.....


""நீ என்ன சொல்றே?'' என்ற பாட்டியின் கேள்வியோடு நிறுத்திய ஞானக்கிளி தொடர்ந்தது!.....
கோமதி, பாட்டியிடம், ""உங்களையும் தாத்தாவையும்தான் சொல்றேன்.... நீங்கதானே அப்பாவைப் பெற்றீங்க....பாடுபட்டு வளர்த்தீங்க...., நல்ல கல்வியைக் கொடுத்தீங்க.....அம்மா இந்த வீட்டுக்கு வந்ததும் அன்பாப் பார்த்துக்கிட்டீங்க....நீங்க இல்லாம அவங்க ஏது?....அப்புறம் நாங்க ஏது?...'' என்றாள்.
கோமதி இப்படிச் சொன்னதும் குமரனும் குரல் கொடுத்தான்.
""ஆமா பாட்டி....நீங்க தெம்பா இருந்தப்போ இந்த வீட்டுக்காக எப்படி ஓடியாடி வேலை செஞ்சீங்க....எவ்வளவு கஷ்டபட்டீங்கன்னு அப்பா, அம்மா ரெண்டுபேருமே சொன்னாங்க....உங்க அருமை எங்களுக்குத் தெரியும்...''
அம்மாவும் அப்பாவும் சில சமயம் மறந்துவிடும் அந்த விஷயத்தை குழந்தைகள் நினைவுபடுத்தினார்கள்.
பாட்டிக்கு மனசு குளிர்ந்து போயிற்று.
இரண்டு நாள் முன்புகூட குமரனுக்கு நெஞ்சில் சளி. முதல் நாள் பெய்த மழையில் தெருவில் ஆட்டம் போட்டதன் விளைவு. தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தான். பாட்டி ஓடிப்போய் நன்றாகத் துவட்டி விட்டாள். இருந்தும் சளி பிடித்துவிட்டது!
தானாகச் சரியாகிவிடும் என்று அப்பாவும் அம்மாவும் நினைத்தார்கள். அவன் இருமினான். அவன் கஷ்டத்தைப் பார்க்க பாட்டிக்குப் பொறுக்க முடியவில்லை.
தோட்டத்தில் இருந்த கற்பூரவள்ளியையும், துளசியையும் பறித்து வந்து கஷாயம் வைத்துக் கொடுத்தாள். முகம் சுளித்தாலும் குடித்தான்.
""மதியம் சுடுசோற்றிலே கொஞ்சம் மிளகுப்பொடியைப் போட்டு நெய்யையும் சேர்த்துச் சாப்பிடு...சளி பறந்து போகும்!...'' என்றாள்.
""பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டில்கூட உணவு உண்ணலாம்...''என்று மிளகின் மகிமை கூறும் பழமொழியை மனதில் பதித்தாள்.
வீட்டுக்கு பின்புறம் சிறியதாகக் காலியிடம்....மண் தரை....அதில் துளசி, கற்பூரவள்ளி....திருநீற்றுப்பச்சை....தூதுவளை....சோற்றுக் கற்றாழை என்று பல செடிகள். பாட்டியும் தாத்தாவும்தான் பராமரிப்பு.
இரவு தாத்தாவுக்கு மாத்திரை தேவை. மருந்துச் சீட்டைக் கையில் வைத்தவாறே தயங்கினார்.
""தாத்தா....சீட்டைக் கொடுங்க....நான் சிட்டாய் ஓடி வாங்கி வர்றேன்....உங்களைவிட எனக்கு டி.வி. முக்கியமில்லே...''
பத்து நிமிடத்தில் மாத்திரை கைக்கு வந்தது.
சின்னச் சின்ன உதவிகள். அந்த முதியவர்களுக்கு அவை மகிழ்ச்சி தரும் மழைத்துளிகள்!....
""பாட்டி,...தாத்தா,...இந்தக் கண்ணாடிப் பேழையிலே உள்ளது உயர்வான கல்லா இருக்கலாம்.....அதைவிட உயர்ந்தவங்க....மதிப்பு மிக்கவங்க நீங்க....உங்களை நாங்க எங்க கண்ணிலே வெச்சுப் பாதுகாப்போம்!...''
அன்பெனும் ஓடையில் அவர்கள் நனைந்தார்கள்!....பேரப் பிள்ளைகளை அன்போடு அரவணைத்தார்கள்....
அப்பா அம்மாவின் கண்களும் கசிந்தன.
ஞானக்கிளி சொன்ன கதை எல்லோரையும் அமைதியில் ஆழ்த்தியது! சிந்திக்க வைத்தது!.....
கிளி வரும்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...