அந்தச் சிறுவன் வீட்டில் ஒரு பப்பாளி மரம் இருந்தது! அதில் ஒரு காய் காய்த்தது! அந்தச் சிறுவன், காய் முற்றி எப்போது பழுக்கும் என்று ஆர்வமாகத் தினமும் அந்த மரத்தைப் பார்த்து விட்டு வருவான்.
எதிர்பார்த்தபடி அந்த நாளும் வந்தது. காய் பழுக்கும் நிலையை அடைந்ததும் தன் தாயின் சம்மதத்துடன் அதைப் பறித்துப் பழுக்க வைத்தான். அது நன்றாகக் கனிந்தது. பிறகு அதை உண்ண தன் தாயின் அனுமதியைக் கேட்டான்.
அவனது தாய் சிறுவனை நோக்கி, "" அதைக் கழுவிப் பின் தோலை நீக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கித் தா!'' என்று கூறினார்.
சிறுவனும் அம்மா சொன்னபடி பழத்தை நன்றாகக் கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொண்டு வந்தான்.
அம்மா சிறுவனிடம், ""நமது தெருவில் எவ்வளவு பேர் வீட்டில் பப்பாளி மரம் இருக்கிறது ?''
என்று கேட்டார்.
""நம்ம வீட்டில் மட்டும்தான்!''
""அப்படியானால் பழத்தை நீ மட்டும் தின்பது நியாயமா? நம் வீட்டில் மரம் இருந்தாலும் அது நம் தெருவில் உள்ளோருக்கும் சொந்தம்தான்!.... நீ இந்தப் பழத்தை நண்பர்களுடன் பகிர்ந்து உண்!''
சிறுவனும் அந்தப் பழத்தை நண்பர்களுடன் பகிர்ந்து உண்டான்!
அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பூதான இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த விநோபா பாவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


