புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிறுவர் பாடல்!: காக்கையக்கா!

காக்கை யக்கா கரியவள்!கடின அலகு உடையவள்!

News image
Updated On :15 அக்டோபர் 2018, 10:15 am

அழகு இராமானுஜன்

காக்கை யக்கா கரியவள்!
கடின அலகு உடையவள்!
ஊக்கத்தாலே மரம்தனில் 
கூடி கட்டி வாழ்பவள்!

வெள்ளை முட்டை இடுபவள்
கரிய குஞ்சு பொரிப்பவள்!
ஆ காயத் தோட்டி என்று அவளை 
அன்புடனே அழைக்கிறோம்!

எங்கள் அம்மா கூரை மேல்  
சோறு வைத்து அழைத்ததும்
அங்கு வந்து சேர்பவள்
ஆசையோடு பார்ப்பவள்! 

தனது இனத்தைக் கூட்டியே 
தானும் இணைந்து உண்பவள்!
உனக்கும் எனக்கும் ஒற்றுமையின் 
பெருமை உரைத்துச் சிரிப்பவள்!

கரிய தனது அலகை விரித்து 
கத்தும் சத்தம் கேட்போம்!
கா........கா.......கா.......கா
கா........கா.........கா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.