வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திமிங்கல வேட்டை நிறுத்தப்படுமா?

திமிங்கிலங்கள் தற்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

News image
Updated On :15 அக்டோபர் 2018, 10:23 am

திமிங்கிலங்கள் தற்போது எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். 

எனவே பிரேசில் நாடு , "ஃப்ளோரியானோஜோலிஸ் டெக்ளரேஷன்'  என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் நோக்கம், திமிங்கில வேட்டையை நிறுத்துவதுதான்!  

இக்கருத்தை "உலக திமிங்கில பாதுகாப்பு' அமைப்பிடம் பரிந்துரைத்தது.  அந்த அமைப்பு  ஒரு ஓட்டெடுப்பு நடத்தியது! 

அதில் பிரேசில், ஆஸ்திரேலியா உட்பட திமிங்கில வேட்டையைத்  தடைசெய்வதற்கு ஆதரவாக 40 நாடுகள் முன்வந்தன.   

எனினும், ஜப்பான், நார்வே உள்ளிட்ட  27 நாடுகள் திமிங்கில வேட்டையை ஆதரித்தன. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பிரேசிலின் கருத்தை ஆதரிக்கின்றனர். அனேகமாக திமிங்கில வேட்டை நிறுத்தப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.