ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பாரதி என்றொரு சாரதி!

பாரதி என்றொரு சாரதி வந்தொருசரித்திரம் ஆகி நின்றார் - புதுச்சாத்திரம் கூறிச் சென்றார்

News image
Updated On :17 செப்டம்பர் 2018, 8:38 am

கே.பாலசுப்பிரமணியன்


பாரதி என்றொரு சாரதி வந்தொரு
சரித்திரம் ஆகி நின்றார் - புதுச்
சாத்திரம் கூறிச் சென்றார்

ஊரெலாம் ஒன்றெனும் ஒருமைப் பாட்டை
உயிரெனப் பேண்ச்சொன்னார்! - நம்மை 
உயர்வழி காணச் சொன்னார்!

காலை எழுந்ததும் படித்திடு என்று 
கன்னத்தில் முத்தமிட்டார்! - நமக்குக் 
கவியெனும் மெத்தையிட்டார்!

மாலை முழுதும் விளையாடு எனவே 
மனங்களை உறுதி செய்தார்! - நம் 
வழிகளைப் புதுமை செய்தார்!

பொய்யையும் புரட்டையும் புரட்டிப் போட்டுப் 
பொதுமையை நாடச் சொன்னார் - போலிப் 
பெருமையைச் சாடச் சொன்னார்!

கைகளை உயர்த்திக் கண்களைச் சுழற்றிக் 
கடமைகள் ஆற்றச் சொன்னார்! - வரும் 
தடைகளை ஓட்டச் சொன்னார்!

தமிழத்திரு நாட்டினைத் தாயெனக் கும்பிட்டுத் 
தரணியைப் பேசச் சொன்னார்! - வெறும் 
தருக்கரை ஏசச் சொன்னார்!

அமிழ்தினும் இனிதென அன்னைத் தமிழை 
அரியணை ஏற்றச் சொன்னார்! - இந்த 
அகிலத்தை மாற்றச் சொன்னார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.