நினைவுச் சுடர்!: ரமணர் உணர்த்திய பாடம்!
ஒரு நாள் ரமண மகரிஷி ஆசிரமத்தின் சமையலறைக்குள் நுழைந்தார். அங்கே தரையில் அரிசி இறைந்து கிடப்பதைக் கண்டார். கீழே அமர்ந்த அவர் ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்க ஆரம்பித்தார்.


ஒரு நாள் ரமண மகரிஷி ஆசிரமத்தின் சமையலறைக்குள் நுழைந்தார். அங்கே தரையில் அரிசி இறைந்து கிடப்பதைக் கண்டார். கீழே அமர்ந்த அவர் ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்க ஆரம்பித்தார்.
அங்கு வந்த ரமணரின் பக்தர்கள் இந்தக் காட்சியைக் கண்டார்கள். பெருந்துறவியான ரமண மகரிஷி அரிசியைப் பொறுக்குவதைப் பார்த்து வியப்படைந்தார்கள்.
ஆர்வ மிகுதியால் அவர்கள் ரமணரிடம், ""சுவாமி!.... நமது சமையல் அறையில் அரிசி மூட்டைகள் நிறைய இருக்கின்றன. சில அரிசிகளைப் பொறுக்குவதற்காகத் தாங்கள் இவ்வளவு துன்பப்படலாமா?...'' என்று கேட்டார்கள்.
அதற்கு ரமணர், ""நீங்கள் இவற்றை வெறும் அரிசியாகப் பார்க்கிறீர்கள்! இந்த அரிசிக்குள் என்ன இருக்கிறது என்று பாருங்கள்! உழவர்களின் கடும் உழைப்பு இருக்கிறது! மழை, நீர், சூரியனின் ஒளி! காற்று! உரமிட்ட மென்மையான மண்!.... இவை அனைத்தும் இந்த அரிசியில் இருக்கின்றன. அவைகள் அழகான இந்த மணியாக உருவெடுத்திருக்கின்றன! இதை நீங்கள் உணருகிறீர்களா?.... இவற்றை எல்லாம் உணர்ந்தால் ஒவ்வொரு தானியத்திற்குள்ளும் இறைவனின் அருள் இருப்பதை உணர்வீர்கள்! அதனால் உங்கள் கால்களால் அவற்றை மிதித்து வீணாக்க மாட்டீர்கள். பொறுக்கிச் சேர்ந்த இந்த தானியத்தை நீங்கள் உண்ண விரும்பாவிட்டால் அவற்றைப் பறவைகளுக்குத் தாருங்கள்'' என்றார்.
அரிசி மூலம் ரமணர் உணர்த்திய பாடத்தை பக்தர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...