வரம்!
பரபரப்பான சிந்தனையோடு படுத்துக் கிடந்தது ஆட்டுக்குட்டி! கொக்கு பறந்ததையும், குருவி பறந்ததையும் அண்ணாந்து பார்த்தது! அதற்குப் பறந்து போக ஆசை வந்துவிட்டது!


பரபரப்பான சிந்தனையோடு படுத்துக் கிடந்தது ஆட்டுக்குட்டி! கொக்கு பறந்ததையும், குருவி பறந்ததையும் அண்ணாந்து பார்த்தது! அதற்குப் பறந்து போக ஆசை வந்துவிட்டது!
எதிரில் இருந்த கனகாம்பிகை அம்மன் கோயிலுக்குப் போனது. உள்ளம் உருகி வணங்கியது. அம்மன் தோன்றினாள்.
""ஆட்டுக்குட்டியே!... உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!...'' என்று அம்மன் கேட்டாள்.
அம்மனை வியப்புடன் பார்த்த ஆட்டுக்குட்டி, ""நான் ஆகாயத்தில் அந்தப் பறவைகள் போலப் பறக்க ஆசைப்படுகிறேன்....'' என்றது.
""ம்ம்.... தருகிறேன்!....ஆகாயத்தில் ஏதேனும் ஆபத்து வந்தால் என்னைக் கூப்பிடு!... நான் உடனே வருவேன்!...'' என்றாள் அம்மன்.
""ஆபத்தா?.... எனக்கா?....வரவே வராது!....'' என்றது ஆட்டுக்குட்டி.
இது குட்டியின் சிறுபிள்ளைத்தனம் எனறு புரிந்து கொண்டது அம்மன். குட்டிக்கு இறக்கைகளை அருளினாள் அம்மன்.
ஆட்டுக்குட்டி உற்சாகமாக ஆகாயத்தில் கிளம்பியது.
உயரம் போகப் போக உற்சாகம் கூடியது! தலைகால் புரியவில்லை!.... பறந்து திரிந்தது. திசை தெரியாமல் யோசிக்காமல் விரைந்தது! பொழுதும் போய்விட்டது! ஆட்டுக்குட்டிக்குக் களைப்பு ஏற்பட்டது! உடல் கனப்பதை உணர்ந்தது! உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தது.
பூமியாகுமா வான வெளி? கடிக்கப் புல்லும், குடிக்க நீரும், படுக்க இடமும் அங்கே ஏது?...ஆட்டுக்குட்டிக்கு திகிலாகிவிட்டது!
இருட்ட ஆரம்பித்து விட்டது! அந்த நேரம் பார்த்து சூறாவளியுடனஅ கூடிய மழை வேறு வந்துவிட்டது! குட்டியின் இறக்கை நனைந்து விட்டது!....தலைகால் புரியாமல் பறந்ததால் ஒரு இறக்கை முறிந்தும் விட்டது! குட்டி பயந்தே விட்டது! அச்சத்தால் அலற ஆரம்பித்து விட்டது!
அம்மன் தோன்றினாள்!.... காப்பாற்றினாள்! திகைப்புடன் அம்மனை நோக்கி அழுதது குட்டி.
சிறகுகளை அகற்றும்படி வேண்டியது. அம்மன் அகற்றினாள்.
""வேறு வரம் வேண்டுமா?...'' என்று கேட்டாள் அம்மன்.
""வேண்டாம் தாயே!.... வாழ்க்கையே நீ கொடுத்த வரம்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்'' என நன்றியோடு சொன்னது ஆட்டுக்குட்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...