பாராட்டுப் பாமாலை! 36: லிடியனின் உலக சாதனை!
சென்னை நகரின் சீர்மிகு இடமாம்சாலி கிராமம் பகுதியில் வாழும் அன்னை ஜான்ஸி அப்பா வர்ஷன்


சென்னை நகரின் சீர்மிகு இடமாம்
சாலி கிராமம் பகுதியில் வாழும்
அன்னை ஜான்ஸி அப்பா வர்ஷன்
அன்பு மகனாம் ஆருயிர் "லிடியன்'
என்னே திறமை என்னே திறமை
என்றே உலகம் வியந்து போற்ற
சின்னஞ்சிறிய பன்னிரு வயதில்
சாதனை படைத்தான் கீர்த்தி பெற்றான்
கடந்த வாரம் அமெரிக் காவில்
கலையில் சிறந்த கலைஞர்க் கிடையே
நடந்து முடிந்த "பியானோ' போட்டியில்
நர்த்தனம் ஆடின லிடியன் விரல்கள்!
இடர்கள் தாண்டி போட்டி போட்ட
இருபத் தெட்டு நபர்களை வென்று
அடடா வென்றே புகழும் வண்ணம்
அகிலம் போற்ற வாகை சூடினான்
இமிழ்கடல் சூழ்ந்த இந்திய நாட்டின்
இணையிலா கலைஞன் என்ற சிறப்புடன்
அமிழ்தினும் இனிய நற்றமிழ்க் கலைஞன்
அருந்தமிழ்ப் புதல்வன் கூடுதல் பெருமை
நிமிடம் ஒன்றில் அதிக "பீட்' களைப்
பியானோ கருவியில் இசைத்துக் காட்டித்
தமிழர் மாண்பை உலகில் உயர்த்திய
தமிழ்த் தும்பி வாழ்க வாழ்கவே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...