பொன் மொழிகள்

கடவுளுக்கு அடுத்தபடியாக காலத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்
பொன் மொழிகள்
Updated on
1 min read

கடவுளுக்கு அடுத்தபடியாக காலத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும்.
-லவேட்டர்

எப்படி வெற்றி பெறுவது என்பதை தெரிந்து கொள். அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பதையும் கற்றுக்கொள்.
-பார்கா

வாழ்க்கையின் உண்மையான இன்பம் இருப்பது மனநிறைவிலும் தன் கடமைகளையும் தனக்குள்ள வேலைகளையும் செய்து முடிப்பதிலுமே இருக்கும்.
-கன்பூஷியஸ்

அழகான பொருட்கள் உலகில் உண்டு. ஆனால் மிக மிக அழகானவை பயனுள்ள பொருட்களே!
-ரஸ்கின்

நம் துரதிர்ஷ்டங்கள் பற்றிய கவலையே அவற்றுக்குள்ள வலிமையை அதிகரிக்கும்
-வால்ட்டேர்

நீ நன்றாகப் பேசினாய் எனப் பாராட்டு பெறுவதை விட நீ நன்றாகச் செய்தாய் என்று பாராட்டு பெறுவது மேல்
-பெஞ்சமின் பிராங்க்ளின்

தோல்வியிலும் மனம் தளராது எழுந்து நிற்கும் தன்மையை எப்போது ஒருவன் பெறுகிறானோ அவன் தான் உலகில் மிகவும் தைரியமான மனிதன்
-இங்கர்சால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com