மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நினைவுச் சுடர்!: ஊக்கமூட்டும் சொற்கள்!

ஒரு முறை விவேகானந்தர் இமயமலையில் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

News image
Updated On :2 நவம்பர் 2019, 12:53 pm

மயிலை மாதவன்


ஒரு முறை விவேகானந்தர் இமயமலையில் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்குள்ள பல ஆன்மிகத் தலங்களுக்கும், புனிதப் பிரதேசங்களுக்கும் விஜயம் செய்தார். கடினமான பாதை. வண்டி வசதிகள் கிடையாது. அவர் மிக உற்சாகமாக நடந்து கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு முதியவரும் இமயமலையின்மீதுள்ள ஒரு கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பாதையில் ஒரு மலைச்சரிவில் முதியவரால் நடக்க இயலவில்லை. அவர் மிகவும் சோர்ந்து காணப்பட்டார். களைத்துப் போய் ஒரு பாறையில் உட்கார்ந்து விட்டார்.

விவேகானந்தரைப் பார்த்த அவர், ""அப்பாடி!.... இந்தப் பாதையை நான் எப்படிக் கடக்கப் போகிறேன்?...... இனிமேல் என்னால் நடக்க இயலாது!.... மூச்சு இரைக்கிறது!....'' என்றார்.

விவேகானந்தர் தன்னிடம் இருந்த தண்ணீரை அவருக்குக் கொடுத்தார். அவரது சோர்வை நீக்க அவரிடம், ""பெரியவரே!.... உங்கள் காலுக்குக் கீழே பாருங்கள்!.... மிக நீண்ட அந்தப் பாதையைப் பாருங்கள்!.... நீங்கள் எவ்வளவு தூரம் வந்துவிட்டீர்கள்!.... இந்தப் பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான்!.... உங்கள் முன்னால் தெரியும் பாதையும் விரைவில் உங்கள் காலுக்குக் கீழே வந்துவிடும்!....''

பெரியவர் தான் கடந்து வந்த மலைப்பாதையை நோக்கினார்!.... அவருக்கு வியப்பாய் இருந்தது!.... "நாம் எவ்வளவு தூரம் கடந்து விட்டோம்!' என்று ஆச்சரியப்பட்டார்! அவருக்கு புதிய தெம்பு வந்தது! உற்சாகம் பிறந்தது! பெரியவர் உத்வேகத்துடன் மலைமீது நடக்கலானார்.

அவருடன் பேசிக்கொண்டே விவேகானந்தரும் நடந்தார்! இருவரும் மலையின் மீதிருந்து கடவுளை தரிசித்தனர்!

பெரியவர் விவேகானந்தரை நோக்கி, ""எல்லாம் நீங்கள் கொடுத்த உற்சாகம்தான்!... உங்களால்தான் எனக்கு இந்தக் கடவுள் தரிசனம் சாத்தியமாயிற்று!'' என்றார்.

விவேகானந்தர் இறைவனின்உருவத்தைக் காட்டி, ""இவரால்தான் எல்லாம் நடக்கிறது!....'' என்றார். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.